www.garudabazaar.com

John Wick - 4: பட ரிலீஸ்க்கு ஒரு வாரம் முன்பே மரணமடைந்த நடிகர் Lance Reddick.. படத்தையே சமர்ப்பணம் செய்த Keanu Reeves!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜான் விக் படங்களின் மூலம் பிரபலமான நடிகர் லான்ஸ் ரெட்டிக் காலமானார்

John Wick Movie Actor Lance Reddick Passed away

தி வயர், ஃப்ரிஞ்ச் மற்றும் ஜான் விக் சீரிஸ்  திரைப்படங்களில்  குணச்சித்திர வேடங்களில் நடித்தவர் நடிகர் லான்ஸ் ரெட்டிக். அவருக்கு வயது 60. ரெட்டிக், நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை காலை "திடீரென்று" மரணம் அடைந்தார் என அவரது மக்கள் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

அவரது மரணம் இயற்கையான காரணங்களால் ஏற்பட்டுள்ளது என்றும் அவருடைய மக்கள் தொடர்பாளர் மியா ஹேன்சன் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். லான்ஸ் ரெட்டிக்குக்கு  ஸ்டெபானி ரெட்டிக் என்ற மனைவியும்  யுவோன் நிக்கோல் ரெடிக் மற்றும் கிறிஸ்டோபர் ரெடிக் என்ற மகன்களும் உள்ளனர்.

ஜான் விக் - 4, இயக்குனர் சாட் ஸ்டாஹெல்ஸ்கி மற்றும் நடிகர் கீனு ரீவ்ஸ் இருவரும் அடுத்த வாரம் ரிலீஸ் ஆகவிருக்கும் ஜான் விக் - 4 படத்தை ரெட்டிக்கிற்கு அர்ப்பணிப்பதாகவும், அவரது இழப்பில் ஆழ்ந்த வருத்தமும் மனமுடைந்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

John Wick Movie Actor Lance Reddick Passed away

People looking for online information on John Wick, Keanu Reeves, Lance Reddick will find this news story useful.