www.garudabazaar.com

விறுவிறுப்பாக ஜிகர்தண்டா டபுள் X ஷூட்டிங்.. DOP திரு பகிர்ந்த டிரெண்டிங் BTS போட்டோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகமான ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார்.

Jigarthanda Double X Shooting Spot BTS Image

Images are subject to © copyright to their respective owners.

Also Read | "உடலினை உறுதிச் செய்".. சமந்தாவின் வெறித்தனமான உடற்பயிற்சி.. இணையத்தை கலக்கும் வைரல் போட்டோ!   

கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, கருணாகரன், லட்சுமி மேனன், அம்பிகா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.   ஜிகர்தண்டா படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை பாபி சிம்ஹா இந்த படத்திற்காக 2015 ஆம் ஆண்டு பெற்றார்.

இந்தப் படம் வெளியாகி  8வது ஆண்டு விழாவை முன்னிட்டு  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது ட்விட்டர் பக்கத்தில்  ஜிகர்தண்டா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாகவும்,  அதற்கான முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன என்றும் அதிகாரப்பூர்வமாக கார்த்திக் சுப்புராஜ் அறிவித்திருந்தார்.

Jigarthanda Double X Shooting Spot BTS Image

Images are subject to © copyright to their respective owners.

பின்னர் இந்த படத்திற்கு "ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ்" என தலைப்பிட்டு படத்தின் முதல் லுக் போஸ்டர்கள் வெளியாகி இருந்தன. இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். 

Jigarthanda Double X Shooting Spot BTS Image

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்தில் வில்லனாக பிரபல நடிகர் எஸ்.ஜே. சூர்யா நடிக்கிறார். எஸ். ஜே. சூர்யா ஏற்கனவே கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இறைவி படத்தில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது ஷங்கர் & ராம் சரண் இணையும் RC15 படத்திலும்,  விஷால் நடிக்கும் மார்க் ஆண்டனி படத்திலும் எஸ். ஜே. சூர்யா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jigarthanda Double X Shooting Spot BTS Image

Images are subject to © copyright to their respective owners.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 12  முதல் மதுரையில் துவங்கி படப்பிடிப்பு தென் தமிழகத்தின் பல இடங்களில் நடைபெற்றது.

Jigarthanda Double X Shooting Spot BTS Image

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் 40-வது பிறந்தநாளை முன்னிட்டு ஒளிப்பதிவாளர் திரு, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜிகர்தண்டா டபுள் எஃக்ஸ் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட BTS புகைப்படத்தை வெளியிட்டு கார்த்திக் சுப்புராஜை வாழ்த்தியுள்ளார்.

Also Read | SURIYA 42 டைட்டில், டீஸர் & ரிலீஸ் தேதி அறிவிப்பு எப்போ? தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா EXCLUSIVE! போடு வெடிய

Jigarthanda Double X Shooting Spot BTS Image

People looking for online information on Jigarthanda Double X, Jigarthanda Double X Shooting update will find this news story useful.