www.garudabazaar.com

இயக்குனர் ஷங்கர் - ராம் சரண் இணையும் RC15 புதிய படம்! இணைந்த விஜய் - தனுஷ் பட பிரபலம்!!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழின் முன்னணி இயக்குனரான இயக்குனர் ஷங்கர், தற்போது தெலுங்கு மற்றும் இந்திப் படங்களில் பணியாற்ற ஒப்பந்தமாகி உள்ளார்.

jani master to team up with shankar ramcharan RC15

ராம்சரண் நடிக்கும் பெயரிடப்படாத RC15 என அழைக்கப்படும் தெலுங்கு படத்தை அடுத்து இயக்க இருக்கிறார் ’பிரம்மாண்ட’ இயக்குனர் ஷங்கர். இந்த படத்தை தெலுங்கு பட உலகின் மிகப்பெரிய தயாரிப்பாளர்களில் ஒருவரான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷனின் தில் ராஜூ தயாரிக்கிறார். பிரபல ஒளிப்பதிவாளர் திரு (எ) திருநாவுக்கரசு ISC இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

jani master to team up with shankar ramcharan RC15

Rc 15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் ராம்சரனின் 15வது திரைப்படமாகும். அதுமட்டுமில்லாமல் தயாரிப்பாளர் தில் ராஜூவுக்கு 50வது திரைப்படம் ஆகும். இந்தப் படத்தின் இசையமைப்பாளராக இசையமைப்பாளர் தமன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பு தமன் பிறந்த நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

jani master to team up with shankar ramcharan RC15

இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை  கீரா அத்வானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே ராம்சரணுடன் 'வினயவிதேயராமா' படத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தொடர்ச்சியாக தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்துள்ளார். ராம்சரண்- கீரா அத்வானியுடன் நடிகர்கள் ஜெயராம், சுனில், அஞ்சலி ஆகியோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

jani master to team up with shankar ramcharan RC15

இந்த படத்தின் துவக்க விழா செப்டெம்பர் 8 அன்று ஐதராபாத்தில் நடந்தது. இந்நிலையில் மாஸ்டர் ஜானி(Jani Master) தனது டிவிட்டர் பக்கத்தில் ராம்சரணுடன் இருக்கும் நடன ரிகர்சல் புகைப்படத்தை பகிர்ந்து இந்த படத்தில் நடனம் அமைப்பது குறித்து உறுதியானதை அறிவித்தார். 

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

jani master to team up with shankar ramcharan RC15

People looking for online information on Kiara Advani, Ramcharan, Shankar will find this news story useful.