www.garudabazaar.com

வெறித்தனம்!!.. பிரபல தமிழ் பாட்டுக்கு குத்தாட்டம் .. ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரின் ViralVideo!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

2018-ம் ஆண்டில் தடக் (Dhadak) படம் மூலம் அறிமுகமானவர் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூர்.

Janhvi Kapoor dance Nakka Mukka tamil folk video viral

கோஸ்ட் ஸ்டோரீஸ், ரூஹி, குஞ்சன் சக்சேனா போன்ற பாராட்டு பெற்ற படங்களில் தோன்றிய ஜான்வி கபூர், ஸ்ரீதேவி மற்றும் போனி கபூர் தம்பதியரின் மகளாக பிரபலமானவர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவில், ஜான்வி கபூர், தனது 'நண்பர்களுடன்' , ‘காதலில் விழுந்தேன்’ படத்துக்காக விஜய் ஆண்டனி இசையில் உருவான பிரபல பாடலான 'நாக்க முக்கா' பாடலுக்கு வேற லெவலில் குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் ஸ்ரீதேவி மகளா இது? என ஆச்சரியப்பட்டுள்ளனர்.

ரசிகர்கள் பலரும் இந்த வீடியோவை பார்த்து பகிர்ந்து வருகின்றனர். முன்னதாக கடற்கரையோரம் ஜான்வி கபூர் நடந்து செல்லும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தன. இந்நிலையில் தான், நாக்க முக்கா குத்துப் பாடலுக்கு செம்ம ஆட்டம் போட்டுள்ளார்.

தவிர, ஜான்வி கபூர், தோஸ்தானா-2 படத்திலும் நடிக்கிறார். அக்‌ஷய் குமார், ஜான்வி கபூர் மற்றும் லக்ஷ் லால்வானி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்துடன், ஆனந்த்.எல்.ராய் இயக்கும் குட் லக் ஜெர்ரி படத்திலும் ஜான்வி நடிக்கிறார்.

ALSO READ: ஷங்கரைத் தொடர்ந்து #RAP019 ஷூட்டிங்கில் மூத்த தமிழ் இயக்குநர்!.. Trend ஆகும் ஃபோட்டோஸ்!

தொடர்புடைய இணைப்புகள்

Janhvi Kapoor dance Nakka Mukka tamil folk video viral

People looking for online information on Janhvi Kapoor, Janvi kapoor, Trending, Viral will find this news story useful.