மதுரை அன்புசெழியன் வீடு மற்றும் ஆபிசில் தொடரும் வருமான வரித்துறை ரெய்டு..!
முகப்பு > சினிமா செய்திகள்தயாரிப்பாளர் அன்புசெழியன் வீட்டிலும் ஆபீசிலும் வருமான வரித்துறையினர் ரெய்டு செய்வதாக கூறப்படுகிறது.

கோபுரம் ஃபிலிம்ஸின் உரிமையாளர் மதுரை அன்புசெழியன். வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்தார். மேலும் மற்ற நிறுவனங்களின் படங்களுக்கும் இவர் ஃபைனான்ஸ் செய்துள்ளார். இந்நிலையில் அன்புசெழியனிடம் வருமான வரித்துறை ரெய்டு செய்வதாக சொல்லப்படுகிறது. மதுரையில் இருக்கும் அவரது வீட்டிலும், சென்னையில் இருக்கும் வீடு மற்றும் ஆபிசிலும் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், இன்று பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும் ஐ.டி ரெய்டு நடந்ததாக சொல்லப்படுகிறது. மேலும் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பில் வருமான வரித்துறையினர் விஜய்யை சந்தித்து, அவருக்கு சம்மன் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.
Tags : Anbuchezhian, Gopuram Films, It raids