இஸ்பேடு ராஜா இயக்குநர் படத்தில் பிக் பாஸ் ஸ்டார்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Nov 29, 2019 06:16 PM
'புரியாத புதிர்', 'இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்' ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி.

அவரது அடுத்த படத்தின் படப்பிப்பு நேற்று (நவம்பர் 28) துவங்கியதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது.
தற்காலிகமாக ’புரடக்ஷன் நம்பர் ஒன்’ என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தை Third Eye Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது.
பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இப்படத்தில் பிந்து மாதவி, தர்ஷணா பனிக் ஆகியோர் பிரதான வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த திரைப்படம் குறித்து தயாரிப்பாளர் தேவராஜூலு கூறுகையில், “ரஞ்சித் ஜெயக்கொடியின் முந்தைய படங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஒரு திரில்லர் கதையாக இது இருக்கும்” என குறிப்பிட்டார்.
Tags : Bindhu Madhavi, Ranjit Jeyakodi