பிரபல கிராமிய பாடகி பரவை முனியம்மாவுக்கு மருத்துவ உதவி செய்த ஐசரி கணேஷ்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Oct 31, 2019 06:06 PM
நடிகரும், இசை கலைஞருமான பரவை முனியம்மா கடந்த சில மாதங்களாகவே உடல் நலக் குறைவால் அவதிப்படுவதை அறிந்து, தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் மருத்து உதவிக்கு வழிவகைச் செய்துள்ளார்.
![Isari Ganesh helps Paravai Muniyama by admitting her in Hospital Isari Ganesh helps Paravai Muniyama by admitting her in Hospital](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/isari-ganesh-helps-paravai-muniyama-by-admitting-her-in-hospital-photos-pictures-stills.jpg)
விக்ரம் நடிப்பில் வெளியான ‘தூள்’ படத்தில் மதுரை வீரன் தானே என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானவர் நடிகை பரவை முனியம்மா. இந்த படத்தை தொடர்ந்து சுமார் 25 திரைப்படங்களுக்கு மேல் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார்.
மதுரை தனது மகனுடன் வசித்து வந்த பரவை முனியம்மா, கடந்த சில மாதஙக்ளாகவே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து, அவரது மருத்துவ செலவுக்கு அரசு உதவ வேண்டும் என அவரது குடும்பத்தினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், இது குறித்து அறிந்த பிரபல திரைப்பட தயாரிப்பாளரும், கல்வியாளருமான ஐசரி கணேஷ், மதுரையில் உள்ள தனது மருத்துவ கல்லூரியின் டீனிடம் பேசி, பரவை முனியம்மாவின் மருத்துவ செலவிற்கு வழிவகை செய்துள்ளார். மதுரை வேலம்மாள் மருத்துவ கல்லூரியின் தலைமை மருத்துவர் முத்துராமலிங்கம் என்பவரை தொடர்பு கொண்டு பரவை முனியம்மாவின் உடல் நிலையை விவரித்து மருத்துவமனையில் உடனடியாக அனுமதிக்க செய்துள்ளார்.