www.garudabazaar.com

PS 2 : ராஜ ராஜ சோழன் இந்து அரசனா? - நீண்ட நாள் சர்ச்சைக்கு முதல்முறை மணிரத்னம் Reply

முகப்பு > சினிமா செய்திகள்

By |

அமரர் கல்கியின் புகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார்.

Is Raja Raja Chola Hindu Maniratnam Reply Ponniyin Selvan 2

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1”  கடந்த 2022 செப்டம்பர் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு நிலவியது.  இந்த படம் உலகம் முழுவதும் 500+ கோடி ரூபாயை வசூலித்து சாதனை படைத்தது. 

இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். சுந்தர சோழர் கதாபாத்திரல் பிரகாஷ் ராஜ், பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர்.  சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். சம்புவராயன் கதாபாத்திரத்தில் நிழல்கள் ரவி, சேந்தன் அமுதன் கதாபாத்திரத்தில் அஷ்வினும், நம்பி கதாபாத்திரத்தில் ஜெயராமும் நடிக்கின்றனர். மதுராந்தக தேவராக ரகுமான், பாண்டிய ஆபத்துதவி தலைவனாக ரவிதாசன் கேரக்டரில் கிஷோர், பார்த்திபேந்திர பல்லவன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபு,  அனிருத்த பிரம்மராயர் கதாபாத்திரத்தில் பிரபு, சிறுவயது நந்தினியாக சாரா அர்ஜூன், வாசுகியாக வினோதினி, தம்புலா புத்த பிக்‌ஷூ கதாபாத்திரத்தில் கோபி கண்ணதாசன் நடிக்கின்றனர்.

இதன் தொடர்ச்சியாக லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம்  PS-2 திரைப்படம் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என  அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்துள்ளார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

பாண்டிய ஆபத்துதவிகளை தூண்டிவிட்டு, ஆதித்த கரிகாலன் மீதான தன் பழைய வஞ்சத்தை தீர்த்துகொள்ள நந்தினி செய்யும் சூழ்ச்சியும் அதனால் சோழ அரியணைக்கு வரும் ஆபத்தும், இதை எதிர்கொள்ள, தான் விரும்பும் வந்தியத்தேவன் மூலம் இலங்கையில் உள்ள தன் சகோதரனும் பொன்னியின் செல்வனுமான அருள்மொழிவர்மனுக்கு செய்தி அனுப்புகிறார் சோழ இளவரசி குந்தவை. நந்தினியின் சூழ்ச்சி எப்படி சோழர்களால் முறியடிக்கப்படுகிறது? நந்தினி திருந்தினாரா? ஆதித்த கரிகாலன் என்ன ஆகிறார்? ஆதித்த கரிகாலனுக்கும் நந்தினிக்குமான பிரச்சனைக்கு பின்னணி தெளிவானதா? என்பதை நோக்கி இப்படத்தின் 2-ஆம் பாக கதை பயணிக்கிறது.

இந்நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படக் குழுவினர் சென்னையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், “ராஜராஜ சோழனை இந்து மன்னனாக காண்பிக்க கூடிய, அவருடைய அடையாளத்தை  மாற்றக்கூடிய முயற்சி நடக்கிறது. அவர் தமிழ் மன்னனாக காண்பிக்கப்படவில்ல  என்பது போன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த விமர்சனங்களை எப்படி பார்க்கிறீர்கள்?” என்று இயக்குநர் மணிரத்னத்திடம் நிரூபர்கள் தரப்பில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த இயக்குனர் மணிரத்னம், “இதில் எதற்காக மதத்தை நுழைக்கிறீர்கள் ? இது ஒரு சரித்திர புனைவு கதை. ராஜராஜசோழன் நம் அனைவராலும் பெருமைப்படக்கூடிய, வியக்கத்தக்க சாதனைகளை செய்துள்ளார். அதைப்பற்றி வந்த திரைப்படம் தான் இது. இது கல்கி அவர்கள் எழுதியதை வைத்து உருவான திரைப்படம். இல்லாத ஒரு விஷயத்தை சர்ச்சைக்காகவே எழுப்புவது தேவையற்றது, நான் இதை அப்படித்தான் பார்க்கிறேன்!” என்று குறிப்பிட்டார்.

PS 2 : ராஜ ராஜ சோழன் இந்து அரசனா? - நீண்ட நாள் சர்ச்சைக்கு முதல்முறை மணிரத்னம் REPLY வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Is Raja Raja Chola Hindu Maniratnam Reply Ponniyin Selvan 2

People looking for online information on Jayam Ravi, Mani Ratnam, Ponniyin Selvan 2, Ponniyin Selvan Part 2, PS2 will find this news story useful.