தமிழ், இந்திய முன்னணி திரைப் பிரபலத்தின் குடும்பத்தில் பேரிழப்பு! திரைத்துறை இரங்கல்!
முகப்பு > சினிமா செய்திகள்திரைத்துறையில் அடுத்தடுத்து திரைக்கலைஞர்களின் நெருங்கிய உறவுகளும் சொந்தங்களும் மரணிக்கும் சம்பவங்கள் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன.

குறிப்பாக கலைஞர்களின் குடும்பத்தினரையே இழந்து வருவதும் மேலும் சோகமான சம்பவமாக இருக்கிறது. அண்மையில் தான் இயக்குநர் வெங்கட் பிரபு, நடிகர் பிரேம்ஜி உள்ளிட்டோரின் தாயாரும், இயக்குநர் கங்கை அமரனின் மனைவியுமான மணிமேகலை உயிரிழந்தார்.
இதேபோல் இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தம் மனைவியையும், இயக்குநர் ஷங்கர் தம் தாயாரையும் இழந்தனர். தொடர்ந்து இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலனின் தந்தையும் இயக்குநருமான ஜி.என்.ரங்கராஜன் காலமானார். இவர் தான் கமல்ஹாசன் நடித்த கல்யாணராமன், மீண்டும் கோகிலா உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியவர்.
கலை இயக்குநர் ராஜீவன்
இந்நிலையில் தமிழ் மற்றும் இந்திய திரைப்படங்களில், முன்னணி ஹீரோக்கள் மற்றும் முன்னணி இயக்குநர்களின் படங்களில் கலை இயக்குநராகவும் புரொடக்ஷன் டிசைனராகவும் அறியப்படும் ராஜீவன் தமது தந்தை கோவிந்தன் குட்டியை இழந்துள்ளார். அவருக்கு வயது 81. அவரது மறைவுக்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: அதிர்ச்சி மரணம்! தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங்.. 1500 படங்கள்.. சாதனை கலைஞர்!