தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங்.. 1500 படங்கள்.. சாதனை கலைஞரின் அதிர்ச்சி மரணம்!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல பின்னணி பாடகரும் இசையமைப்பாளருமான கண்டசாலாவின் மகன் கண்டசாலா ரத்னகுமார் திடீர் மரணமடைந்துள்ளார். இவரது இந்த மறைவு செய்தி திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவின் பழம்பெரும் பாடகரும் இசையமைப்பாளருமாக அறியப்படுபவர் கண்டசாலா வெங்கடேஸ்வர ராவ். பழம் தமிழ் படங்கள் உட்பட பல மொழி திரைப்படங்களிலும் பாடியும் இசையமைத்தும் புகழ்பெற்றவர் இவர். இவரது மகன் தான் கண்டசாலா ரத்னகுமார்.
கண்டசாலா ரத்னகுமார் சினிமா டப்பிங் கலைஞராக பரவலாக அறியப்படுபவர். திரைப்படங்கள், சின்னத்திரை தொடர்கள் என சுமார் 40 வருடமாக 1500 -க்கும் மேற்பட்ட படங்களுக்கு தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் டப்பிங் பேசியுள்ள ரத்னகுமார், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் தொடர்ந்து 8 மணி நேரம் டப்பிங் பேசியெல்லாம் சாதனை படைதுள்ளார்.
அண்மையில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர் பின்னர் கொரோனாவிலிருந்து குணமாகினார். எனினும் சிறுநீரக பாதிப்பு உள்ளிட்ட வேறு சில உடல்நல பிரச்சினைகள் இருந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில் அவர் திடீரென உயிரிழந்துள்ளார். இவரது மறைவை அடுத்து திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ALSO READ: விஷால் பரபரப்பு புகார்!.. மௌனம் கலைத்த தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி! நடந்தது என்ன?