Jai been others
www.garudabazaar.com

“மூஞ்சில அடிச்ச மாதிரி .. சர்வாதிகாரமா இருக்கு”.. நேராக சொன்ன ஹவுஸ்மேட்ஸ் .. கண்ணீரில் இசைவாணி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டுக்குள் இசைவாணியை இமான் அண்ணாச்சி, அக்ஷரா, தாமரைசெல்வி உள்ளிட்ட சிலர் விமர்சித்து இருக்கின்றனர். இதனால் இசைவாணி அழுது கொண்டே அங்கிருந்து சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

imman and thamarai critics isaivani attitude biggbosstamil5

கானா பாடகராக பிக் பாஸ் வீட்டுக்குள் வந்த இசைவாணி ஆரம்பத்தில் அனைவருடன் பழகினாலும் பின்னர் அனைவரும் தன்னுடன் பழகாமல் விலகுவது போல் உணர்ந்ததாக ஒரு இடத்தில் குறிப்பிட்டார். சில ஹவுஸ்மேட்ஸ் அவர்தான் தங்களிடமிருந்து இசைவாணி தள்ளி இருப்பதாகவும் குறிப்பிட்டு இருந்தனர்.

imman and thamarai critics isaivani attitude biggbosstamil5

இதனிடையே கிச்சன் பிரிவுக்கு இசைவாணி தலைவரானார். இதற்கு காரணம் காயின் டாஸ்க் மூலம் இசைவாணி நெருப்பு ஆற்றலுக்கான நாணயத்தை கைப்பற்றியது தான். தொடர்ந்து கிச்சனில் எந்த பொருட்கள் எடுக்க வேண்டும், எவ்வளவு சமைக்க வேண்டும் உள்ளிட்டவை தொடங்கி பல்வேறு விதிமுறைகளை இசைவாணி வகுத்துக் கொண்டார்.

அந்த விதிமுறைகளின் கீழ் நடக்க வேண்டும் என்று அனைவரிடமும் அவ்வப்போது அறிவுறுத்தியும் எச்சரிக்கை செய்து கொண்டும் வந்திருந்தார். ஆனால் இவையெல்லாம் கடுமையான தொனியில் இருப்பதாகவும் சற்றே சர்வாதிகார போக்காக இருப்பதாகவும் இமான் அண்ணாச்சி இசைவாணியிடம் தெரிவித்ததுடன்,  “முகத்துக்கு நேரே நான் சொல்கிறேன் என்றால் அதற்கு காரணம் நான் உன் மீது வைத்திருக்கும் அன்புதான்... அந்த உரிமையில் தான் சொல்கிறேன்... மற்றவர்கள் சொல்லாமல் இருக்கலாம்.. மற்றவர்களை பற்றி எனக்கு கவலை இல்லை. நான் சொல்கிறேன்!” என்று தெரிவித்திருந்தார்.

imman and thamarai critics isaivani attitude biggbosstamil5

ஆனால் இசைவானி, “அதற்காக நான் அவ்வாறு செய்யவில்லை எனும் போது அப்படி சொன்னால் எப்படி அண்ணாச்சி?” என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார். இதேபோல அக்ஷரா கூறும்போதும, “மூஞ்சில அடிச்ச மாதிரி நீ பேசுற” என்று இசைவாணியிடம் குறிப்பிட்டிருந்தார்.

imman and thamarai critics isaivani attitude biggbosstamil5

தொடர்ந்து தாமரை இசைவாணியிடம் பேசும்போது, “நீ முன்பெல்லாம் பாடுவாய்.. இப்போது பாடுவதை மறந்துவிட்டாய்.. பாசமாய் பேசுவாய்... இப்போது அதையும் மாற்றி கொண்டு விட்டாய்” என்று குறிப்பிட்டார். இமான் அண்ணாச்சியும் இதைத்தான் மாற்றிக்கொள்ள சொல்கிறோம் என்று மீண்டும் அழுத்தம் திருத்தமாக கூற, அப்போது இசைவாணி, தான் அவ்வாறு இருந்தால் தானே மாற்றிக்கொள்ள முடியும்.. தன்னிடம் இல்லாத ஒன்றை எப்படி மாற்றிக் கொள்ள முடியும்? என்று கேட்டு அழத் தொடங்கி விட்டார்.

தொடர்புடைய இணைப்புகள்

imman and thamarai critics isaivani attitude biggbosstamil5

People looking for online information on Imman Annachi, Isaivani, Thamarai Selvi will find this news story useful.