www.garudabazaar.com

நடிகர் சுஷாந்த் பண்ணை வீட்டில் அதிரடி சோதனை... ஹூக்கா... ஆஷ் டிரே... காதலியுடன் பார்ட்டி..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் பாவானா ஏரி பண்ணை வீட்டில் போதை பொருள் கட்டுப்பாட்டு பிரிவு சோதனை நடத்திய போது  ஹூக்காக்கள், ஆஷ் டிரேக்கள் மற்றும் மருந்துகளை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட பொருட்களின் படங்கள் பிரபல செய்தி நிறுவனமான ஜீ நியூஸ் பிரத்தியேகமாக வெளியிட்டள்ளனர்.

Hookah ashtray found in sushant farmhouse NCB raid |நடிகர் சுஷாந்த் பண்ணை வீட்டில் சோதனை

ஜீ நியூஸ் வெளியிட்ட செய்தியின் அடிப்படியில் சுஷாந்த் இந்த இடத்திற்கு மாதம் 2.5 லட்சம் ரூபாய் வாடகை செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. NCB வட்டாரங்களின் படி, நடிகர் அடிக்கடி நடிகை தோழி ரியா சக்ரபர்த்தி, அவரது சகோதரர் ஷோவிக், வீட்டு மேலாளர் சாமுவேல் மிராண்டா, பிளாட்மேட் சித்தார்த் பிதானி மற்றும் பிற நண்பர்களுடன் பண்ணை வீட்டில் பார்ட்டி செய்துள்ளனர் என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

சுஷாந்த் மற்றும் அவரது நண்பர்களைத் தவிர, பல முன்னணி பாலிவுட் பிரபலங்களும் ஒரே பண்ணை வீட்டில் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. இந்த செய்தி அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்புடைய இணைப்புகள்

Hookah ashtray found in sushant farmhouse NCB raid |நடிகர் சுஷாந்த் பண்ணை வீட்டில் சோதனை

People looking for online information on Drug, Farm house, Ncb, Rhea chakraborthy, Sushant will find this news story useful.