www.garudabazaar.com

Breaking : தனுஷ் போட்ட உடனடி ப்ளான்.. ரசிகர்களுக்கு செம ட்ரீட். என்ன தெரியுமா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து தகவல் தெரிய வந்துள்ளது. 

தனுஷ் பட ஷூட்டிங் தகவல் | Here is an exclusive update on dhanush's atrangi re

தமிழ் சினிமாவில் பிசியான ஹீரோவாக வலம் வருபவர் தனுஷ். இவர் தற்போது கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்துள்ள ஜகமே தந்திரம் ரிலீஸுக்கு தயாராக இருக்கிறது. மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் திரைப்படத்தில் நடிக்கும் இவர், இதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் ஒரு படத்திலும் கார்த்திக் நரேன் இயக்கத்திலும் நடிக்கிறார். மேலும் ராட்சசன் இயக்குநர் ராம்குமாருடன் தனுஷ் இணையவுள்ளதாகவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தனுஷ் பட ஷூட்டிங் தகவல் | Here is an exclusive update on dhanush's atrangi re

இதனிடையே தற்போது தனுஷ் நடித்து வரும் பாலிவுட் திரைப்படமான அத்ரங்கி ரே படப்பிடிப்பு குறித்து பிரத்யேக தகவல் தெரிய வந்துள்ளது. இத்திரைப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 15 நாட்களுக்கு மதுரையில் திட்டமிடப்பட்டுள்ள இந்த ஷூட்டிங்கில் நடிகர் தனுஷ் கலந்து கொள்கிறார் எனவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனந்த் எல்.ராய் இயக்கும் இத்திரைப்படத்தில் அக்‌ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். 

தனுஷ் பட ஷூட்டிங் தகவல் | Here is an exclusive update on dhanush's atrangi re

மேலும் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் கங்கனா ரனாவத் நடித்து வரும் தலைவி படத்தின் ஷூட்டிங்கும் இன்று ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாம். கங்கனாவின் பரதநாட்டிய பாடலை இன்று படமாக்க திட்டமிட்டுள்ளதாம் படக்குழு. மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி இத்திரைப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

தனுஷ் பட ஷூட்டிங் தகவல் | Here is an exclusive update on dhanush's atrangi re

People looking for online information on Aanand L Rai, Akshay Kumar, Atrangi Re, Dhanush, Sara Ali Khan will find this news story useful.