Reliable Software
www.garudabazaar.com
www.garudabazaar.com

Video: 'தலைவன் வேற ரகம்!'.. வைரலாகும் ஜிவி பிரகாஷ் வீடியோ!.. பைக் ஓட்டும் 'விஜய் டிவி' பிரபலம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹீரோவாகவும், மியூசிக் டைரக்டராகவும் வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் அசுரனில் தொடங்கி சூரரைப் போற்றுவரை பேக் டூ பேக் ஹிட்ஸ் கொடுத்தார்.

GV Prakash Viral Video fans excited ஜிவி பிரகாஷ் வீடியோ

இதனிடையே ஜி.வி. பிரகாஷுக்கு படங்களில் நடிக்கவும் வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்த வண்ணம் உள்ளன. கதை தேர்வுக்கும், தனித்துவமான நடிப்புக்கான பாத்திரத்துக்கும் அண்மைக்காலமாக அதிக கவனம் கொடுத்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ் .

மார்ச் மாத இறுதிக்கு பின் ஐங்கரன், ஆயிரம் ஜென்மங்கள், அடங்காதே, ஜெயில், 4 ஜி, காதலை தேடி நித்யானந்தா, காதலிக்க யாருமில்லை, பேச்சிலர், ராஜேஷ் இயக்கும் படம், வெற்றிமாறன் உதவியாளர் மதிமாறன் புகழேந்தி இயக்கும் படம், டிராப் சிட்டி என்ற ஹாலிவுட் படம் என 11 படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆயிரம் ஜென்மங்கள், 4ஜி பட வேலைகள் இறுதிகட்டத்தில் உள்ள நிலையில் எம்.ராஜேஷ் இயக்கத்தில் வணக்கம் டா மாப்ள் படத்தில் நடிக்கும் ஜி.வி.பிரகாஷ் அண்மையில் ஒரு படப்பிடிப்புக்காக சென்ற இடத்தில் கலக்கப்போவது யாரு தீனா மற்றும் இன்னொருவருடன் சேர்ந்து 3 பேராக பைக்கில் அமர்ந்து செல்லும் இயல்பான காட்சிகள் அவரது ரசிகர்களிடத்தில் வைரலாகி வருகின்றன.

ஜி.வி.பிரகாஷையும் சேர்த்து 3 பேர் செல்லும் அந்த பைக்கை தீனா தான் டிரைவ் செய்கிறார். இந்த வீடியோவை ரசிகர் ஒருவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். முண்டாசுப்பட்டி, ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்த பி.வி.சங்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் கள்வன் திரைப்படப் படப்பிடிப்பு பகுதியில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக ரசிகர்கள் இதனை பகிர்ந்துள்ளனர்.

ALSO READ: "அப்பலாம் கைய புடிச்சாலே Sivaangi-க்கு பேச்சு வராது!" ..Viral ஆகும் Live Session வீடியோ!

GV Prakash Viral Video fans excited ஜிவி பிரகாஷ் வீடியோ

People looking for online information on GV Prakash, GV Prakash Kumar will find this news story useful.