www.garudabazaar.com

வேற லெவல் டைட்டில்... ஹிப் ஹாப் தமிழா.. "சிவக்குமாரின் சபதம்" .. வெளியான 3வது சிங்கிள்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஹிப் ஹாப் ஆதியின் "சிவகுமாரின் சபதம்" படத்திலிருந்து, முதலில் வெளியிடப்பட்ட இரண்டு சிங்கிள் பாடல்கள் பெரு வெற்றியை பெற்றன.

hip hop thamizhaa NeruppaIruppan single sivakumarin sabadham

இதனைத் தொடர்ந்து மூன்றாவது பாடலாக “நெருப்பா இருப்பான்” சிங்கிள் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ரொமாண்டிக் பாடலை பத்மலதா பாடியுள்ளார்.

படத்தில் கதாநாயகி (மாதுரி) கதாநாயகனை (ஆதி) காதலித்து, அவரை நினைத்து உருகி பாடுவதாக வரும் பாடல் இது. முதல் இரண்டு பாடல்கள் போலவே, இப்பாடலும் ரசிகர்களிடம் பெரும் ஆதரவு பெற்று வருகிறது.

இப்படத்தில் நடித்தும் இசையமைப்பதுடன், ஹிப்ஹாப் தமிழா இப்படத்திற்கு கதை, திரைக்கதை, பாடல்கள், எழுதி, படத்தை இயக்கவும் செய்துள்ளார். அருண்ராஜா ஒளிப்பதிவு செய்ய,  தபஸ் நாயக் ஒலி கலவை செய்கிறார்.

TG தியாகராஜன், செந்தில் தியாகராஜன், அர்ஜீன் தியாகராஜன் ஆகியோர் SathyaJyothi Films சார்பில், ஹிப் ஹாப் தமிழா மற்றும் Indie Rebels உடன் இணைந்து இந்த ‘சிவக்குமார் சபதம்’ படத்தை தயாரித்துள்ளனர்.

hip hop thamizhaa NeruppaIruppan single sivakumarin sabadham

People looking for online information on Hip Hop Tamizha Adhi, Hip Hop Tamizha Adhi, Sathya Jyothi Films will find this news story useful.