www.garudabazaar.com

போடு சக்க! நம்ம மின்னல் முரளி சிபு.. இப்ப தெறிக்கவிடும் வில்லனா?.. செம தகவல்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Guru Somasundaram: பிரபல நடிகர் குரு சோமசுந்தரம் புதிய திரைப்படம் ஒன்றில் தெறிக்கவிடும் வில்லனாக அவதாரம் எடுத்துள்ளார்.

Guru Somasundaram as antagonist Brahma Bell movie

மின்னல் முரளி சிபு

ஜோக்கர், குற்றமே தண்டனை உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளவர் குரு சோமசுந்தரம். இவர் அண்மையில் வெளியான மின்னல் முரளி திரைப்படத்தில் சிபுவாக நடித்ததன் மூலம் தமது அழுத்தமான நடிப்பை இன்னும் பதிவு செய்துள்ளதாக பராட்டப் பெற்றார். 

Also Read: "யாரையும் hurt பண்ண இல்ல"..  குக் வித் கோமாளி சர்ச்சை.. உடைக்கும் வெங்கடேஷ் பாத்!

தெறிக்கவிடும் வில்லனாக ..

இப்படி தொடர்ந்து எதார்த்த நாயகனாக மட்டுமல்லாமல் வலுவான கதாபாத்திரமாகவும் நடித்து புகழ்பெற்று மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த நடிகர் குரு சோமசுந்தரம் தற்போது ஒரு புதிய திரைப்படத்தில் தெறிக்கவிடும் வில்லனாக நடிப்பது குறித்த செய்தி வெளியாகியுள்ளது.

Guru Somasundaram as antagonist Brahma Bell movie

பெல் திரைப்படம்.. மையக்கதை

ஆம், Brogan movies தயாரிக்கும் Bell என்கிற திரைப்படத்தில் தான் குரு சோமசுந்தரம் வில்லனாக நடிக்கிறார். தவறான ஒருவனுக்கு கிடைத்து விடக் கூடாத ஒரு ரகசியம். பன்னெடுங்காலமாக அந்த ரகசியத்தை பாதுகாக்கும் பரம்பரையின் கடைசி ஒருவனான கிரகாம் பெல் என்ற பார்வைத் திறனற் தனிநபரின் கதையே Bell. பெல் தன் வாழ்கையில் மற்றவர்களை எப்படி பார்க்கிறான் என்பது தான் இதன் திரைக்கதை. இத்திரைப்படம் ஏற்காடு மற்றும் மலைப்பகுதிகளில் மட்டுமே 60 நாட்களில் உருவாகியுள்ளது.

Guru Somasundaram as antagonist Brahma Bell movie

குரு பிரம்மாவாக குரு சோமசுந்தரம்..

இந்த திரைப்படத்தில் குரு பிரம்மா என்கிற கதாபாத்திரத்தில் தோன்றி இந்த கதையின் வில்லனாக குரு சோமசுந்தரம் மிரட்டவிருக்கிறார். நிதிஷ் வீரா மற்றும் கலைமாமணி ஸ்ரீதர் இருவரும் கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ராபர்ட் இசை அமைத்திருக்கிறார். பீட்டர் சக்ரவர்த்தி பாடல்கள் எழுதியிருக்கிறார்.

Guru Somasundaram as antagonist Brahma Bell movie

படக்குழு விபரம்..

பரணிகண்ணன் ஒளிப்பதிவு செய்ய, கதை மற்றும் வசனத்தை வெயிலோன் எழுதியுள்ளார். இந்த திரைப்படத்தை R வெங்கட் புவன், திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். புரோகன் மூவிஸ் சார்பில் இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர்கள் பீட்டர் சக்கரவர்த்தி மற்றும் டேவிட் நலச்சக்கரவர்த்தி தயாரித்துள்ளனர். இப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

Also Read: ஐ..ஐ.. Rowdy Baby ஹலோ சொல்ட்டாங்களே!.. சாய் பல்லவி  fan கூட இல்ல.. குஷி ஆனது யார் பாருங்க! உங்க கால் தரையில இல்ல பாஸூ!

Guru Somasundaram as antagonist Brahma Bell movie

People looking for online information on Bell, Bell movie, Guru Somasundaram will find this news story useful.