தாத்தாவான தயாரிப்பாளர் 'கோபுரம்' அன்புச் செழியன்.. மகள் சுஷ்மிதாவுக்கு குழந்தை பிறந்தது 😍
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல தயாரிப்பாளர் கோபுரம் பிலிம்ஸ் அன்புச் செழியன் மகள் சுஷ்மிதாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

Also Read | தைவான் நாட்டில் கணவர் & மகனுடன் காஜல் அகர்வால்.. செம்ம வைரல் போட்டோஸ்
விநியோகஸ்தர் மதுரை அன்புச்செழியன் மகளும் கோபுரம் சினிமாஸ் உரிமையாளார் சுஷ்மிதா மற்றும் சன் ஐஏஎஸ் அகாடமி இயக்குனர் சரணின் திருமணம் கடந்த பிப்ரவரி மாதம் 21, அன்று சென்னையில் நடைபெற்றது. இதில் பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர்.
குடிமைப்பணி தேர்வுகளுக்கான பயிற்சி நிறுவனங்களில் முன்னிலை வகிக்கும் சன் ஐஏஎஸ் அகாடமியின் நிறுவனர்களில் ஒருவரான ராஜேந்திரன் ஐஏஸ்-இன் மகன் தான் சரண். தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவின் மைத்துனர் ராஜேந்திரன் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் & திரைப்பட விநியோகஸ்தர் அன்புசெழியன் மகள் சுஷ்மிதா, 50-க்கும் மேற்பட்ட திரையரங்குகளை நிர்வகித்து வருகிறார்.
கோபுரம் ஃபிலிம்ஸின் உரிமையாளர் மதுரை அன்புசெழியன். வெள்ளைக்கார துரை, தங்கமகன், மருது உள்ளிட்ட திரைப்படங்களை இவர் தயாரித்தவர். வலிமை, ப்ரின்ஸ் படங்களை வினியோகம் செய்தவர்.
இந்நிலையில் இன்று சுஷ்மிதா - சரண் தம்பதியருக்கு ஆண் குழந்தை பிறந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் தயாரிப்பாளர் அன்புச் செழியன் தாத்தா ஆகியுள்ளார்.
Also Read | "8-வது அதிசயம்".. மனைவி மகாலட்சுமியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உருகிய ரவீந்தர்!
தாத்தாவான தயாரிப்பாளர் 'கோபுரம்' அன்புச் செழியன்.. மகள் சுஷ்மிதாவுக்கு குழந்தை பிறந்தது 😍 வீடியோ