Michael Coffee house
Reliable Software
www.garudabazaar.com

"ஆமா கிழிஞ்ச பேண்ட் தான்"... வைரலாகும் கேபியின் பதிவு... ரியோ என்ன சொல்லிருக்கிறார் பாருங்க..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் நிகழ்ச்சி பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. ஆரி, பாலா, ரம்யா, சோம், ரியோ ஆகிய 5 இறுதிப்போட்டியாளர்களுள் ஆரி  பிக்பாஸ் டைட்டில் வென்றெடுத்தார். ஒவ்வொரு சீசனின் கடைசியிலும் ஒரு அதிரடி திருப்பத்தை போட்டியாளர்கள் முன் வைப்பது பிக்பாஸின்  வழக்கம். அதாவது தனக்கு முதல் இடம் கிடைக்காது என்று நினைக்கும் போட்டியாளர்கள் பிக்பாஸ் கொடுக்கும் தொகையை பெற்றுக்கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்பதாகவே வீடு திரும்பலாம். கடந்த சீசனில் கவின் அப்படி  சமயோஜிதமாக யோசித்து அந்த ஐந்து லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார். இந்நிலையில் இந்த சீசனில் கேபி 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு வீடு திரும்பினார்.

gaby funny post on a modern dress photo வைரலாகும் கேபியின் பதிவு

வயதில் சிறியவராக இருந்தாலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதி வாரம் வரை வந்த பெருமை அவருக்கு இருக்கிறது. மேலும் பல இடங்களில் சமயோசிதமாக யோசித்து சரியான தருணங்களில் தனது கருத்தை வெளிப்படுத்த கூடிய திறமை படைத்தவராக இருந்தார். இந்நிலையில் விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் சமீபத்தில் 'முரட்டு சிங்கிள்ஸ்' என்ற நிகழ்ச்சியின் இரண்டாம் பாகம் தற்போது நடைபெற்று வருகிறது. அதில் செலிபிரிட்டி இளம்பெண்கள் நடுவர்களாக இருக்க முரட்டு சிங்கிள்ஸ் தங்கள் திறமையை வெளிப்படுத்தி அவர்களின் மனதை கவரவேண்டும். இந்த நிகழ்ச்சியில் அப்படியே இரண்டாம் சீசனிலிருந்து யாஷிகா, மூன்றாம் சீசனில் அபிராமியும் இருக்க தற்போது புதிய நடுவராக கேபி பங்கேற்றுள்ளார். இந்நிலையில் சமீபத்தில் மிகவும் மாடர்னாக உடை அணிந்திருந்த கேபி ஒரு புகைப்படத்தை பதிவிட்டு அதற்கு தலைப்பாக "ஆமா கிழிஞ்சி தான் இருக்கு. காசு இருந்தா வாங்கி கொடுங்கப்பா" என்று வேடிக்கையாக பதிவிட்டிருந்தார். இதற்கு பல ரசிகர்களும் கமெண்ட் செய்ய பிக்பாஸ் போட்டியாளரும் அவரது நண்பருமான ரியோ "இருந்தாலும் ரொம்ப கிழிஞ்சிருக்கு" என்று அவரை கலாய்த்துள்ளார்.

Tags : Gaby, Rio

தொடர்புடைய இணைப்புகள்

gaby funny post on a modern dress photo வைரலாகும் கேபியின் பதிவு

People looking for online information on Gaby, Rio will find this news story useful.