நடிகை கேப்ரியெல்லா வாங்கிய பிரபலமான விலையுயர்ந்த கார்! விலை எவ்வளவு தெரியுமா?
முகப்பு > சினிமா செய்திகள்நடிகை கேப்ரியெல்லா, 3 படத்தில் ஸ்ருதிஹாசனின் தங்கையாக சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

Also Read | ஷாருக்கான் - அட்லி படத்தில் இணைந்த பிரபல தமிழ் நடிகர்.. அவரே சொன்ன வேறமாரியான தகவல்!
பின்னர் இவர் சென்னையில் ஓரு நாள் படத்தில் ரியா என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். சமுத்திரகனியின் திரைப்படமான அப்பா படத்தில் ரஷிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். திரைப்படங்களுக்கு முன் ஜோடி ஜூனியர் என்ற விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமானார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7 ஆம் வகுப்பு சி பிரிவு என்ற தொலைக்காட்சி மெகாத் தொடரில் நடித்தார். விஜய் தொலைக்காட்சியின் ஜோடி நம்பர் ஒன் சீசன் 6 ரியாலிட்டி நிகழ்ச்சியில் வென்றார். பிக் பாஸ் தமிழ் சீசன் 4-ல் பங்கேற்றவர். தற்போது ஈரமான ரோஜாவே 2 மெகா தொடரில் காவ்யா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் கேப்ரியெல்லா புதிய காரை வாங்கியுள்ளார்.இது குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், "பல மாத யோசனைக்குப் பிறகு, இறுதியாக ஒரு காரை வாங்க முடிவு செய்தேன், டாடா ஹாரியர் டார்க் எடிஷனை எனது முதல் காராகத் தேர்ந்தெடுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒவ்வொரு நாளும் நீங்கள் எனக்குக் கொடுக்கும் அன்பினாலும் ஆதரவினாலும்தான் இது சாத்தியமானது! இந்த கார் என்னைக் காக்க வேண்டும்! உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன்! அன்பை பரப்புங்கள்" என குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் டாடா ஹாரியர் விலை ₹ 17.99 லட்சத்தில் தொடங்கி ₹ 26.78 லட்சம் வரை விற்கப்படுகிறது. ஹாரியர் ஒரு SUV கார் ஆகும், இது 1956 cc டீசல் எஞ்சின் விருப்பத்தேர்வுகளுடன் வழங்கப்படுகிறது. சாலையில் 1956 சிசி மூலம் இயக்கப்படும் டீசல் இன்ஜினின் விலை ₹ 17.99 - 26.78 லட்சம் ஆகும். ஒரு லிட்டருக்கு 17 கி.மீ மைலேஜ் தர வல்லது.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8
நடிகை கேப்ரியெல்லா வாங்கிய பிரபலமான விலையுயர்ந்த கார்! விலை எவ்வளவு தெரியுமா? வீடியோ