www.garudabazaar.com

Video: 'ரெண்டு' பேருக்கு நடுவுல என்ன நடக்குது?... 'ஹார்ட்' போட்டு கலாய்த்த கேப்ரியலா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிக்பாஸ் வீட்டில் இதுவரை எதிரும் புதிருமாக இருந்த பாலாஜி முருகதாஸ்-சனம் ஷெட்டி தற்போது ஒருவருக்கு ஒருவர் சப்போர்ட் செய்ய ஆரம்பித்து இருக்கின்றனர். இவர்கள் இருவருக்கும் இடையிலான மாடலிங் சண்டை பஞ்சாயத்து கமல் வரை போய் அணைந்தது. ஆனாலும் இவர்கள் மத்தியிலான உரசல் சற்றும் குறையவில்லை.

Gabriella given Heart Symbol for Balaji, What Happened?

மியூஸிக்கல் சேர் போட்டியில் சனம் தன்னை புகழ்ந்து 10 பாயிண்ட்கள் தெரிவிக்க வேண்டும் என பாலாஜியிடம் கேட்டார். பாலாஜி இதை ஏற்றுக்கொண்டு சனமிற்கு குளிர் ஜுரம் வரும் அளவுக்கு விதவிதமாக புகழ்ந்து தள்ளினார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் என்னப்பா இது கிழக்கும், மேற்கும் ஒண்ணா இருக்குது என கலாய்த்தனர்.

இந்த நிலையில் நேற்று இந்த வாரம் முழுவதும் யார் மிகவும் ஆக்டிவாக இருந்தார்கள் என பிக்பாஸ் கேட்க, பாலாஜி உடனடியாக சனம் பேரை சொன்னார். இதைப்பார்த்து சக போட்டியாளர்களே திகைத்து போயினர். அந்தளவுக்கு சனமிற்கு ஆதரவாக பாலாஜி நடந்து கொள்ள ஆரம்பித்து இருக்கிறார். இதைப்பார்த்த கேப்ரியலா, பாலாஜிக்கு ஹார்ட் சிம்பல் போட்டுக்காட்ட என்னடா நடக்குது இங்க? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

Gabriella given Heart Symbol for Balaji, What Happened?

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.