Anasuya Bharadwaj: ‘இனி ஆண்டினு கூப்ட்டா.. போலீஸ்ல சொல்லிடுவேன்’ .. கொந்தளித்த புஷ்பா பட நடிகை.!
முகப்பு > சினிமா செய்திகள்37 வயதாகும் பிரபல நடிகையை, ரசிகர்கள் சிலர் ஆன்ட்டி என்று கூறி வந்ததை அடுத்து அவர்கள் மீது போலீசில் புகார் செய்வதாக குறிப்பிட்ட அந்த நடிகை தெரிவித்துள்ள சம்பவம் பரவலாகி வருகிறது.

தொலைக்காட்சி தொகுப்பாளனியாக அறிமுகமானவர் நடிகை அனுசுயா பரத்வாஜ். தொலைக்காட்சி நிகழ்ச்சியை இவருக்கே உரிய தனித்துவமான பாணியில் தொகுத்து வழங்கி வந்த நிலையில் பின்னர் தொடர்ந்து நடிகையாக இவர் உருவெடுத்தார்.
அண்மையில் அல்லு அர்ஜூன் நடித்து வெளியான புஷ்பா திரைப்படத்தில் முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் அனுசுயா பரத்வாஜ்.
இவர் புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் தற்போது நடிக்கிறார். இந்த நிலையில்தான் அவ்வப்போது சமூக வலைதளத்தில் திரைப்படங்கள் குறித்தும், நடிகர்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வரும் அனுசுயா, தற்போது தன்னை ரசிகர்கள் சிலர் ஆன்ட்டி என்று கிண்டல் செய்வதாக கூறி, பாடி ஷேமிங் போல இதற்குப் பெயர் ஏஜ் சேமிங் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
மேலும் இது தொடர்பாக தன்னை ஆண்டி என்று விமர்சனம் செய்பவர்களுக்கு தொடர்ந்து பதிலடி கொடுத்து பல ட்வீட்களை பகிர்ந்து வருகிறார். ஆண்ட்டி என குறிப்பிட்டு வெளியாகும் சில மீம்களை குறித்தும் விமர்சித்து வருகிறார். ஆனாலும் ஒரு கட்டத்தில் கோபம் தாங்காத அனுசுயா தன்னை ஆண்டி என்று விமர்சிப்பவர்கள் மீது போலீசில் புகார் கொடுப்பதாகவும் சொல்லி இருக்கிறார்.
அத்துடன் தனக்கு 37 வயது தான் ஆகிறது என்றும் 25 வயதுக்கு மேல் உள்ளவர்கள் எல்லாம் தன்னை எப்படி ஆன்ட்டி என்று அழைக்க முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பிய அவர், தன்னை அக்கா என்று அழைக்கவும் கூட தனது சகோதரிக்கே உரிமை இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தொடர்ந்து இதுபோன்ற ஆன்லைன் துன்புறுத்தல்கள் நிறுத்தப்பட வேண்டும் என்றும் பல கருத்துக்களை ட்விட்டரில் பதிவிட்டு வருகிறார்.