சென்னையில் மூடப்படும் பிரபல தியேட்டர்... 50 வருட பெருமை கொண்ட திரையரங்க வரலாறு..!!
முகப்பு > சினிமா செய்திகள்சென்னையில் 50 வருட பெருமை கொண்ட பிரபலமான தியேட்டர் மூடப்படுவதாக தெரிய வந்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடைப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் உள்ள அகஸ்தியா தியேட்டர் நிரந்திரமாக மூடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் சினிமா ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1967-ஆம் ஆண்டு, வடச்சென்னை பகுதியில் உதயமான அகஸ்தியா தியேட்டர் 53 வருட திரை பெருமை கொண்ட தியேட்டராகும். இதில் முதன்முதலில் திரையிடப்பட்ட திரைப்படம் பாமா விஷயம். இதை தொடர்ந்து எம்.ஜி.ஆர் நடித்த பல்வேறு சூப்பர் ஹிட் திரைப்படங்கள் இங்கு பல நாட்கள் ஓடி சாதனை புரிந்தன. மேலும் நடிகர்கள் சிவாஜி, ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா என பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் இங்கு சூப்பர் ஹிட் அடித்தவை.
சிறப்பாக பராமரிக்கப்படும் தியேட்டர்களுக்கான விருதை வென்ற அகஸ்தியா தியேட்டர், கடந்த மூன்று வருடங்களாக ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி காரணமாகவும், தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் சூழ்நிலையாலும் நிரந்திரமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.