SHOCKING : பிரபல நடிகருடனான திருமண வாழ்க்கையை முடித்து கொண்ட முன்னணி ஹீரோயின்.!!
முகப்பு > சினிமா செய்திகள்பிரபல ஹீரோயினுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

பாலிவுட் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக கலக்கி வருபவர் கொங்கனா சென் ஷர்மா. பல முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்துள்ள இவர், தேசிய விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் வென்றுள்ளார். இவர் 2010-ஆம் ஆண்டில், ரன்வீர் ஷோரி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் தற்போது 8 வயதில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்நிலையில் தற்போது கொங்கனா சென்னுக்கும் அவரது கணவருக்கும் விவாகரத்து ஏற்பட்டிருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பிரிந்து வாழ்ந்து வரும் இவர்களுக்கு, நேற்று அதிகாரப்பூர்வமாக விவாகரத்து கிடைத்துள்ளது. இதையடுத்து இருவரிடமும் சமமாக அவர்களின் மகன் வளர்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து 2015-ஆம் ஆண்டில் பேசிய கொங்கனா.., ''நாங்கள் பிரிந்து விட்டாலும், எங்களின் மகனை ஒரு நண்பர்களை போல இணைந்து வளர்ப்போம்'' என்று சொன்னது குறிப்பிடத்தக்கது.