Maha others
Nadhi others
www.garudabazaar.com

Screenplay தான் ப்ளஸ்.. ‘எண்ணித் துணிக’ படவிழாவில் பேசிய நடிகர் ஜெய்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Rain of Arrow Entertainment சார்பில்  சுரேஷ் சுப்பிரமணியன் தயாரிப்பில், இயக்குநர் S.K.வெற்றி செல்வன்  இயக்கத்தில்,  ஜெய் மற்றும் அதுல்யா ரவி ஆகியோர் முதன்மை  கதாபாத்திரங்களில் நடித்துள்ள ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம் “எண்ணித் துணிக” இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் மற்றும் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.

Enni Thuniga press meet Jai athulya ravi

Also Read | சூரரைப் போற்றுக்கு 5 தேசிய விருது.. "ஊர்வசிக்கும் கெடச்சிருக்கணும்" - பிரபல நடிகை ட்வீட்..

இப்படத்தின் எடிட்டர் சாபு ஜோசப் , ஒளிப்பதிவாளர் ஜே பி தினேஷ் குமார், இசையமைப்பாளர் சாம் CS இந்த நிகழ்வில் கலந்துகொண்டு படம் குறித்த தங்கள் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர். இயக்குனர் தமிழ், இயக்குனர் விருமாண்டி, இயக்குனர் நெல்சன், நடிகை அதுல்யா ஆகியோர் இந்த படநிகழ்வில் பேசினர்.

நடிகர் ஜெய் கூறியதாவது.., “இந்த படத்தின் பெரிய பலம் இசை தான். இந்த படத்தில் முழுக்க முழுக்க அர்பணிப்புடன் பணியாற்றியுள்ளோம். இந்த படத்தின் பெரிய பலம் திரைக்கதை தான். இந்த படத்தில் எனக்கு அதிக ஸ்கோப் இருந்தது. இந்த படத்தில் எனது நல்ல நடிப்பிற்கு முழு காரணமும் இயக்குநர் தான். இயக்குநரின் அர்ப்பணிப்பு எனக்கு மிகப்பெரிய அனுபவமாக இருந்தது. படம் பார்த்துவிட்டு நீங்கள் கூறுங்கள்.  நன்றி

இயக்குனர் வெற்றி செல்வன் கூறியதாவது..,“தமிழ்மொழிக்கு எனது முதல் நன்றியை கூறிகொள்கிறேன். இந்த படத்தை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியனுக்கு நன்றி. படத்தின் தலைப்பு தயாரிப்பாளருக்கும், விநியோகஸ்தருக்கும் பொருந்தும். இசையமைப்பாளர் சாமுக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் உடன் பணியாற்றியது சந்தோசம். எனது நண்பன் இந்த படத்தில் எடிட்டராக பணிபுரிந்தது மகிழ்ச்சி. அதுல்யா பெரிய உழைப்பை தந்துள்ளார். நடிகர் ஜெய் இந்த படத்திற்கு பெரிய உழைப்பையும், அர்பணிப்பையும் கொடுத்தார்.  படத்தை பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி” என்று குறிப்பிட்டார்.

நடிகர் மிர்ச்சி சிவா பேசும்போது, “இயக்குநர் என்னை தொடர்ந்து அழைத்து இந்த விழாவிற்கு வரவழைத்தார். தீபாவளிக்கு போன் செய்தால் பொங்கலுக்கு போன் எடுப்பார் ஜெய். போனை அவ்வாறு தான் பயன்படுத்துவார். ஜெய் மிகவும் அர்பணிப்பான நடிகர். ஜெய் மிகபெரிய உயரத்தை அடைவார் அவருக்கு எனது வாழ்த்துகள் . இயக்குநர் கடின உழைப்பாளி என அனைவரும் கூறினர். அவருக்கு எனது வாழ்த்துகள்.” என தெரிவித்தார்.

இப்பட விழாவில் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்துக்காக தற்போது தேசிய விருது பெற்ற இயக்குனர் வசந்த் கூறியதாவது, “நன்றியுணர்வு அதிகம் இருப்பவர் இயக்குனர் வெற்றி, அவர் மிகப்பெரிய வெற்றியடைவார். வெற்றியின் இந்த படத்திற்கு, நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஒளிப்பதிவாளர் தினேஷ் மிகச்சிறந்த கேமராமேன், அவருடைய லைட்டிங், காம்போசிசன் எல்லாம் மிகச்சிறப்பாக இருக்கும். ஆடை வடிவமைப்பாளர், இசையமைப்பாளர், எடிட்டர் என அனைவரும் சிறந்த உழைப்பினை கொடுத்துள்ளனர். முதல் பட இயக்குனர் இயக்கும் போல் இந்த படம் இல்லை. இதை படமாக்கிய விதம் அற்புதமாக இருக்கிறது. இந்த மேடையில் இருக்கும் அனைவருக்கும் எனது வாழ்த்துகள்.”

Enni Thuniga press meet Jai athulya ravi

தயாரிப்பாளர் சுரேஷ் சுப்ரமணியன் பேசும்போது, “இயக்குனர் வெற்றியை பார்த்த போதிலிருந்தே அவர் திறமை மிக்கவர் என எனக்கு தெரியும். இந்த படத்திற்கு ஜெய்யும், அதுல்யாவும் கொடுத்த பங்களிப்பு மிகப்பெரியது. அதற்கு நன்றியை கூறிகொள்கிறேன். தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த படத்திற்கு பெரிய பலம். கண்டிப்பாக இந்த திரைப்படம் உங்களுக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கும். அனைவருக்கும் நன்றி.” என கூறினார்.

க்ரிகெஸ் சினி கிரியேஷன்ஸ் ஸ்ரீதரன் மரியதாசன் பேசும்போது, “இப்படம் மிக அற்புதமாக வந்துள்ளது. வெற்றி மிக நல்ல ஒரு படத்தை தந்துள்ளார். இப்படத்தில் நானும் இணைந்தது மகிழ்ச்சி. தமிழகத்தில் பெரிய எண்ணிகையிலான திரையரங்குகளில் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம். உங்கள் ஆதரவை தாருங்கள் நன்றி.” என்று தெரிவித்துள்ளார்.

இத்திரைப்படத்தில் மேலும் அஞ்சலி நாயர், வம்சி கிருஷ்ணா, வித்யா பிரதீப், மாரிமுத்து, சுனில் ரெட்டி, சுரேஷ் சுப்பிரமணியன் மற்றும் பல முக்கிய  நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். சாம் CS  இசையமைத்துள்ளார், J.B. தினேஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார், மற்றும்  V.J. சாபு ஜோசப் படத்தொகுப்பு செய்துள்ளார்.

Also Read | Megham Karukatha: "அது அவரோட மேஜிக்" - trend-ல் ‘பறக்க பறக்க’ Step.. தனுஷ் வைரல் ட்வீட்..

Enni Thuniga press meet Jai athulya ravi

People looking for online information on Enni Thuniga will find this news story useful.