Video: 'பாவம்யா கண்ணம்மா!'.. ரியாலிட்டி ஷோவில் போட்டி போட்டுக்கொண்டு வெச்சு செஞ்ச வில்லிகள்!'.. Viral Promo!
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் சீரியல் நடிகைகள் பங்கேற்றுள்ள ரியாலிட்டி ஷோ எங்க வீட்டு மகாலட்சுமி.

இந்த ஷோவில் சீரியலில் நடிக்கும் நடிகைகளுக்கு வித்தியாசமான டாஸ்க்குகளுடன் கூடிய சில கான்செப்ட்டுகள் கொடுக்கப்பட்டு நடிக்கச் சொல்லப்படுகின்றன. அந்த வகையில் அண்மையில் இந்த ஷோவில் பங்குபெற்ற ராஜா ராணி 2 நாயகி ஆல்யா மானசா தன்னுடைய நடிப்பால் அனைவரையும் கண்கலங்க வைத்துவிட்டார்.
இந்நிலையில் இந்த சீரியலில் தற்போது ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது. அந்த ப்ரோமோவில் 3 சீரியல்களின் வில்லி நடிகைகள் தத்தம் சீரியல்களில் வரும் நாயகிக்கு எதிராக விஷ பாட்டிலை கையில் வைத்துக்கொண்டு கொடுத்த நேரத்துக்குள் பேச வேண்டும் என்பது போல் நடித்துக்காட்டுகின்றனர். திடீரென மணி ஒலித்துவிட்டால், ஒரு வில்லி நடிகை இன்னொருவரிடம் அந்த பாட்டிலை கொடுத்துவிட வேண்டும்.
இந்த ப்ரோமோவில் வரும் 3 பேரும் ராஜா ராணி-2, பாரதி கண்ணம்மா, காற்றின் மொழி உள்ளிட்ட சீரியல்களில் வில்லிகளாக வருபவர்கள். ஆனால் 3 பேருமே ஒரு கட்டத்துக்கு மேல் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி கண்ணம்மாவை டார்கெட் பண்ணி பேச ஆரம்பித்துவிட்டனர்.
Wait for it! 🤣 #VijayTelevisionAwards #EngaVeettuMahalakshmi - இப்பொழுது ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது நம்ம விஜய் டிவில.. #VTA #VijayTelevision pic.twitter.com/3rWVzXHaNL
— Vijay Television (@vijaytelevision) March 21, 2021
கடைசியில் கண்ணம்மாவுக்கு யார் வில்லி என போட்டியே மாறிவிட்டது. இதை பார்த்த பாரதி கண்ணம்மா சீரியல் நாயகி, ‘அடப்பாவிகளா’ என்பது போல் சிரிக்கிறார். பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி ஹரிப்பிரியனுக்கும் அந்த சீரியலின் நாயகன் அருண் பிரசாத்துக்கும் அண்மையில் Behindwoods Gold Icons டிஜிட்டல் மற்றும் டெலிவிஷன் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர்.
பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி-2 சீரியல்கள் இணைக்கப்பட்டு தற்போது மெகா சங்கமமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதில் பிக்பாஸ் அர்ச்சனா தற்போது இணைந்து, ஒரு கேமியோ ரோலில் நடித்துவருகிறார்.