www.garudabazaar.com

எல்லாரும் வந்தப்போ 'ஒருத்தரு' மட்டும்... என்ன பயமா? ரசிகர்கள் கேள்வி!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சி 4 மணி நேரம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் சுவாரஸ்யமாக இருந்தாலும் போகப்போக நிகழ்ச்சி தொய்வடைந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மிக நீளமாக இருந்ததாகவும், சுவாரஸ்யங்கள் இல்லை (சண்டை போட்டுட்டே இருக்கணும்) என்றும் சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகின்றனர்.

Eleven contestants are nominated for fourth week Eviction

இந்த நிலையில் நேற்று நடைபெற்ற நாமினேஷனில் அதிசயமாக 11 பேர் நாமினேஷன் பட்டியலில் இடம் பிடித்தனர். (50 ஓட்டு தானே போட முடியும்) 16 போட்டியாளர்களில் அர்ச்சனா, ஷிவானி, ஆரி, கேப்ரியலா, சம்யுக்தா ஆகிய ஐந்து பேரை தவிர மற்ற அனைவரும் இந்த பட்டியலில் இடம்பிடித்து உள்ளனர்.

இதில் ஆரி, கேப்ரியலா, சம்யுக்தா ஆகியோரை ஓரொருவர் நாமினேட் செய்தனர். ஆனால் ஷிவானியை யாருமே நாமினேட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. முதல் 2 வாரங்களில் ஹார்ட் டாஸ்க் உள்ளிட்ட அனைத்திலும் ஷிவானியை வச்சு செய்த போட்டியாளர்கள் தற்போது அவரை நாமினேட் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் அர்ச்சனா வீட்டின் இந்தவார கேப்டன் என்பதால் அவரை யாரும் நாமினேட் செய்யவில்லை. ஆனால் ஷிவானியை எப்படி யாருமே நாமினேட் செய்யவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது. ஒருவேளை அவங்க மேல பயமா? எனவும் கிண்டலடித்து வருகின்றனர். 

தொடர்புடைய இணைப்புகள்

Eleven contestants are nominated for fourth week Eviction

People looking for online information on Bigg Boss 4 Tamil will find this news story useful.