“அடிவாங்கதான் ஜீவா.. அவனும் ஒருநாள் திருப்பி அடிச்சான்” - ஈரமான ரோஜாவே திரவியம் ஜாலி பேட்டி
முகப்பு > சினிமா செய்திகள்விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜா சீரியலின் இரண்டாவது சீசன் பலரையும் கவர்ந்துள்ளது. குறிப்பாக ஜீவா & பிரியா மற்றும் பார்த்தி & காவ்யா இணை பலருக்கும் பிடித்தமான ஜோடியாகிவிட்டனர்.
![Eeramana Rojave season 2 actor Dhiraviyam fun interview Eeramana Rojave season 2 actor Dhiraviyam fun interview](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/eeramana-rojave-season-2-actor-dhiraviyam-fun-interview-photos-pictures-stills.jpg)
அண்மையில்தான் பார்த்தியின் அம்மா தொடர்ந்து வற்புறுத்தியதால் பார்த்தியை விட்டு விலகக் கூடிய முடிவை காவ்யா உறுதியாக எடுத்தார். இதற்கு காரணம் காவ்யா யாரையோ பார்த்திக்கும் முன்பாகவே காதலித்ததாக பார்த்தியின் அம்மா பார்வதிக்கு தெரிய வந்தது தான். ஒரு வழியாக பார்த்தியும் உடன்பாடு இல்லை என்றாலும் காவ்யா கேட்ட விவாகரத்தை கொடுத்து விட்டார். ஆனால் ஒருவேளை காவ்யாவிற்கு தன்னுடன் சேர்ந்து வாழ விருப்பம் இருந்தால் எப்போது வேண்டுமானாலும் சேர்ந்து வாழலாம் என்று ஒரு கடிதத்தையும் பார்த்தி காவ்யாவுக்கு எழுதியிருந்தார்.
இதனிடையே பார்த்திக்கு, தன்மகள் ரம்யாவை திருமணம் செய்து வைக்க தேவி சூழ்ச்சி செய்து அதை திருமணம் வரை கொண்டு வந்து விட்டார். அப்போது பார்த்தி எழுதிய கடிதம் கிடைத்து, நேரில் வந்த காவ்யாவை தேவி ஆள் வைத்து கடத்த முயற்சித்தார். அதை ஜீவா தடுத்து விட்டார். இன்னொரு புறம் தேவிக்கு எதிரான சாட்சியமாக ஜேகே, தேவியின் சூழ்ச்சிகளை அறிந்த பார்வதி அனைவராலும் திருமணம் தடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பார்த்தி & காவ்யா திருமணம் அரங்கேறிவிட்டது. ஆனால் ஜீவா & ப்ரியா ஜோடியை பலருக்கும் பிடித்திருந்தாலும் இன்னும் இவர்கள் இருவரும் சரிவர ஒன்றுசேரவில்லை. இதுகுறித்து பிஹைண்ட்வுட்ஸில் பேசினார் ஜீவா கேரக்டரில் நடிக்கும் திரவியம். அதில், “இந்த சீரியலில் அடி வாங்குவதற்கென்றே ஒருத்தரை நேர்ந்துவிட்டார்கள் என்றால் அது ஜீவாதான். ஆனாலும் ஒருமுறை, ஒரே ஒருமுறை ஜீவா திருப்பி கொடுத்தான். (கலகலப்பாக சொல்கிறார்). ஆனால் ஜீவா அடிவாங்குவதெல்லாம் சாதாரணம் ஆகிவிட்டது. ஜீவா திருப்பி கொடுப்பதெல்லாம் லைட்டாதான். விளையாட்டாக சொல்கிறேன், ஜீவாவை அடிப்பதும் அப்படி அடிக்க மாட்டார்கள். லைட்டாக தான்” என குறிப்பிட்டுள்ளார்.
“அடிவாங்கதான் ஜீவா.. அவனும் ஒருநாள் திருப்பி அடிச்சான்” - ஈரமான ரோஜாவே திரவியம் ஜாலி பேட்டி வீடியோ