துல்கர் சல்மான் , கௌதம் மேனன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் Trailer இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Behindwoods News Bureau | Jul 28, 2019 05:50 PM
மலையாளத்தில் பிரபல ஹீரோவாக இருக்கும் துல்கர் சல்மான் தமிழில் 'வாயை மூடி பேசவும்' படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து மணிரத்னத்தின் ஓகே கண்மணி அவரது நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

இதனையடுத்து அவர் ஹீரோவாக நடிக்கும் படம் தற்போது 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்'. இந்த படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார்.
இந்த படத்தை தேசிங் பெரியசாமி இயக்குகிறார். இந்த படத்தை வியாகாம் 18 நிறுவனம் இந்த படத்தின் மார்க்கெட்டிங் பணிகளை செய்ய விருக்கிறார்கள். இந்த படத்துக்கு மசாலா கஃபே இசையமைத்து உள்ளது.
இந்நிலையில் இந்த படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படம் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த படத்தை ஆன்டோ ஜோசஃப் பிலிம் கம்பெனி தயாரித்து வருகிறது
துல்கர் சல்மான் , கௌதம் மேனன் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் TRAILER இதோ! வீடியோ