www.garudabazaar.com

20 படம்.. திரையுலகில் 20 ஆண்டுகளை பூர்த்தி செய்த இயக்குனர் சுசீந்திரன்.! நெகிழ்ச்சி பதிவு

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக அறியப்படுபவர் சுசீந்திரன்.

Director Suseenthiran completed 20 years in tamil film industry

இவர் இயக்கிய வெண்ணிலா கபடி குழு இரண்டு பாகங்கள், நான் மகான் அல்ல, ஜீவா உள்ளிட்ட படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. விஷால் நடிப்பில் பாயும் புலி, பாண்டிய நாடு உள்ளிட்ட திரைப்படங்களை சுசீந்திரன் இயக்கினார். இவரது இயக்கத்தில் கடந்த வருடம், கென்னடி க்ளப், சாம்பியன் உள்ளிட்ட படங்கள் வெளியாகின. 

சிம்புவின் கம்பேக் படமான ஈஸ்வரன் திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கியிருந்தார். இந்நிலையில் திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகள் நிறைவடைந்தது குறித்து இயக்குனர் சுசீந்திரன் நெகிழ்ச்சி அடைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கை வைரலாகி வருகிறது.

Director Suseenthiran completed 20 years in tamil film industry

அதில், “2003 ஆம் ஆண்டு உதவி இயக்குனராக தொடங்கியது எனது சினிமா வாழ்க்கை. வெண்ணிலா கபடி குழு முதல் வள்ளி மயில் வரை 20 திரைப்படங்கள் எனது இயக்கத்தில். இந்த சினிமாதான் எனக்கு எல்லாமே தந்தது. இந்த நேரத்தில் என் குரு சபாபதி சார், எழில் சார் என்னுடைய நண்பர்கள், எனக்கு உதவிய உதவி இயக்குநர்கள், எனது தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் எனது தயாரிப்பாளர்கள் மற்றும் பத்திரிகை - ஊடக நண்பர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்” என்று தெரிவித்திருக்கிறார்.

Director Suseenthiran completed 20 years in tamil film industry

People looking for online information on Suseendran, Suseenthiran will find this news story useful.