www.garudabazaar.com
iTechUS

கையில் காயத்துடன் "சூரரைப் போற்று' சுதா கொங்கரா.. என்னாச்சு? வைரலாகும் ட்வீட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் சுதா கொங்கரா.

Director Sudha Kongara Tweet about Her Hand Fracture

Images are subject to © copyright to their respective owners.

இவர் இயக்கிய துரோகி, இறுதிச்சுற்று திரைப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இவர் தனது மூன்றாவது படமாக சூர்யா நடிப்பில் சூரரைப் போற்று திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகி வெற்றி பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் வென்றது.

சூரரைப் போற்று படத்தின் வெற்றியை அடுத்து அந்த படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது. தமிழில் சூர்யா நடித்த கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கிறார். இன்னும் இந்த படத்துக்கு பெயர் சூட்டப்படவில்லை. இந்த படத்தையும் சுதா கொங்கராவே இயக்குகிறார். கதாநாயகியாக ராதிகா மடன் நடிக்கிறார். சூர்யாவின் 2 டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைத் தயாரிப்பாளராக இந்த படத்தைத் தயாரிக்கிறது.

சூரரைப் போற்று இந்தி ரீமேக் படத்திற்கு பிறகு KGF 2 மூலம் கவனம் பெற்ற ஹோம்பாலே   நிறுவனத்தின் அடுத்த படத்தை இயக்க  இயக்குனர் சுதா கொங்கரா ஒப்பந்தம் ஆகியுள்ளார். இந்த படத்தின் ஹீரோ யார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Director Sudha Kongara Tweet about Her Hand Fracture

இந்நிலையில் சுதா கொங்கரா தனது டிவிட்டர் பக்கத்தில் கையில் காயத்துடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "காயத்தால் ஒரு மாதம் ஓய்வு. காயம், சூப்பராக வலி நிறைந்து எரிச்சலூட்டுவதாக அமைந்துள்ளது. இப்படி ஒரு ஓய்வை நான் கேட்கவில்லை" என சுதா கொங்கரா ட்வீட் செய்துள்ளார். இந்த சுதா கொங்கரா டவீட்டுக்கு ஜி.வி. பிரகாஷ் குமார், "விரைவில் குணமாகி வாருங்கள் அக்கா" என ட்வீட் செய்துள்ளார்.

Director Sudha Kongara Tweet about Her Hand Fracture

People looking for online information on Sudha Konagara will find this news story useful.