www.garudabazaar.com

பிரபல ஹீரோயினுடன் நடிகராக களமிறங்கும் செல்வராகவன் - வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் செல்வராகவன் நடிகராக களமிறங்கும் 'சாணிக் காயிதம்' படத்தின் பர்ஸ்ட் லுக் செம சர்ப்ரைஸாக வெளியாகியுள்ளது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கிறாராம். அருண் மாதேஸ்வரன் இந்த படத்தை இயக்குகிறார்.

Director Selvaraghavan and Keerthy Suresh's Saani Kaayidham's first look | செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் சாணிக் காயிதம் ஃபர்ஸ்ட் லுக்

'சாணிக் காயிதம்' படத்தை ஸ்க்ரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் மாதேஸ்வரன் ஏற்கனவே 'ராக்கி' என்ற படத்தை இயக்கியுள்ளார். ராக்கி படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அந்த படம் வெளியாகும் முன்பே இயக்குநர் அருண் மாதேஸ்வரனின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Director Selvaraghavan and Keerthy Suresh's Saani Kaayidham's first look | செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் சாணிக் காயிதம் ஃபர்ஸ்ட் லுக்

'சாணிக் காயிதம்' பட ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்த கீர்த்தி சுரேஷ், இயக்குநர் செல்வராகவனுடன் நடிப்பது குறித்து மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும் நடிகர் தனுஷ் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பகிர்ந்து, உங்கள் நடிப்புத் திறமையை என்னைப் போலவே இந்த உலகமும் காணப்போகிறது செல்வா சார் என்று  தெரிவித்துள்ளார்.

 

Director Selvaraghavan and Keerthy Suresh's Saani Kaayidham's first look | செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் சாணிக் காயிதம் ஃபர்ஸ்ட் லுக்

Director Selvaraghavan and Keerthy Suresh's Saani Kaayidham's first look | செல்வராகவன் - கீர்த்தி சுரேஷின் சாணிக் காயிதம் ஃபர்ஸ்ட் லுக்

People looking for online information on Arun Matheswaran, Keerthy Suresh, Selvaraghavan will find this news story useful.