இயக்குநர் ராஜ் கபூரின் மகன் ஷாருக் கபூர் மெக்காவுக்கு சென்றிருந்த போது காலமானார் என தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக வலம் வந்தவர் ராஜ் கபூர். தாலாட்டு கேட்குதம்மா படத்தின் மூலம் அறிமுகமான இவர், சின்ன ஜமீன், வள்ளல் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி பிரபலமடைந்தார். நடிகர் அஜித்தை வைத்து அவள் வருவாளா மற்றும் ஆனந்த பூங்காற்றே ஆகிய படங்களை இவர் இயக்கியுள்ளார். இயக்கம் மட்டுமன்றி குணச்சித்திர மற்றும் வில்லன் வேடங்களிலும் நடித்து வந்தார் ராஜ் கபூர்.
இந்நிலையில் ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூர் காலமானதாக தெரிய வந்துள்ளது. மூச்சு தினறல் பிரச்சனை உள்ள அவர், தனது தாயாருடன் மெக்கா சென்றிருக்கிறார். அங்கு அவருக்கு சீதோஷ்ன நிலை ஒற்றுக்கொள்ளாமல் போக, மூச்சு தினறல் ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். ஷாருக் கபூரின் உடலை மெக்காவிலேயே நல்லடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து இயக்குநர் ராஜ்கபூர் மெக்கா செல்கிறார். ஷாருக் கபூரை சினிமாவில் அறிமுகம் செய்வதற்கான வேலை நடந்து கொண்டிருந்த சமயத்தில், 23 வயதிலேயே அவர் காலமாகியிருப்பது குடும்பத்தினருக்கு பெரும் சோகத்தை அளித்துள்ளது.