காதல் கண் கட்டுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அதுல்யா. அதன்பின் நாகேஷ் திரையரங்கம், ஏமாளி, சுட்டு பிடிக்க உத்தரவு, அடுத்த சாட்டை, கேப்மாரி, நாடோடிகள் 2 படத்தின் மூலம் பிரபலமானார். இவர் நடித்த காதல் கண் கட்டுதே படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதன்பின் இயக்குனர் அன்பழகன் இயக்கத்தில் சமுத்திரக்கனி நடிப்பில் வெளிவந்த அடுத்தசாட்டை படத்திலும் கதாநாயகியாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் வெளிவந்த நாடோடிகள் 2 படத்தில் திறமையான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது பாராட்டையும் பெற்றிருந்தார். நாகேஷ் திரையரங்கம் படத்தில் நடிகர் ஆரிக்கு வாய் பேச முடியாத தங்கையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். கடந்த வருடம் நடிகர் விஜய்யின் தந்தை S.A. சந்திரசேகர் இயக்கத்தில் வெளிவந்த கேப்மாரி என்ற படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில், சாந்தனு நடிப்பில் வெளிவந்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்திலும் நடித்திருந்தார். தற்போது அந்த படம் கலவையான விமர்சனங்களுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தின் போஸ்டரை வைத்து சூப்பரான வீடியோ ஒன்று வெளிவந்துள்ளது.
முருங்கைக்காய் சிப்ஸ் படத்தின் போஸ்டர் ஒன்று பொதுவெளியில் ஒட்டப்பட்டிருந்தது. அப்போது அங்கிருந்த ஒரு நபர் அங்குமிங்கும் பார்த்துவிட்டு திடீரென போஸ்டரில் இருந்த அதுல்யா ரவியின் படத்திற்கு முத்தம் கொடுத்துவிட்டு சென்றார். முதலில் அவர் அதுல்யாவை சிறிது நேரம் உத்துப் பார்த்துக் கொண்டிருந்தார். பின்னர் திடீரென அங்குமிங்கும் யாராவது இருக்கிறீர்களா என்று பார்த்தபடியே, யாரும் தன்னைப் பார்க்கவில்லை என்று தெரிந்தவுடன், அதுல்யா படத்திற்கு முத்தம் கொடுத்து, உடனே அங்கிருந்து சென்று விட்டார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
"அதுல்யாவ உத்து பாத்த UNCLE.. செஞ்ச சேட்டையை பாருங்க! வீடியோ