Reliable Software
www.garudabazaar.com

இயக்குநர் ஹரி மருத்துவமனையில் அனுமதி.. படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா.. நடந்தது என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் சாமி, சிங்கம் உள்ளிட்ட பல கமர்ஷியலாக வெற்றி பெற்ற படங்களின் இயக்குநர் ஹரி.

director Hari hopsitalised a film crew man tested covid positive

இந்நிலையில் இயக்குநர் ஹரி உடல்நலக்குறைவால் மருத்துவமனையின் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் திரைப்பட ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பழனியில் படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த போது இயக்குநர் ஹரிக்கு இவ்வாறு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதனைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்குக் காரணம் படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதுதான் என்றும், இதனைத் தொடர்ந்து படத்தில் பண்புரிவோர் 20 பேருக்கு கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிகிறது. இயக்குநர் ஹரி தற்போது அருண் விஜயை வைத்து புதிய படமொன்றை இயக்கிவருகிறார். அண்மையில் தான் இந்த படத்துக்கு பூஜை நடந்த புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வந்தன. 

ALSO READ: அஜித்-ன் இன்னொரு Trendging வீடியோ.. 'இது எப்ப?'.. தல இவ்ளோ சிம்பிளா? நெகிழும் சிகர்கள்!

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

director Hari hopsitalised a film crew man tested covid positive

People looking for online information on Coronavirus, Covid19, Hari will find this news story useful.