Video: "இனி எவ்ளோ அழுதாலும்..!" .. தந்தையை இழந்த பிரபல நடிகர்-இயக்குநர் உருக்கம்!
முகப்பு > சினிமா செய்திகள்“என் அப்பா மீது.. நான் எவ்வளவு பாசம் வைத்திருக்கிறேன் என்பதை அவர் இல்லாத இந்த நேரத்தில்தான் நான் உணர்கிறேன்” என்று நடிகர், இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் உருக்கமாக தெரிவித்திருக்கிறார்.

விஜய் டிவியின் பிரபலமான ரியாலிட்டி ஷோவான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் விக்னேஷ் கார்த்திக் பார்த்திருக்க முடியும். அதன் பிறகு எத்தனையோ ஷோக்களை பண்ணிய விக்னேஷ் கார்த்திக் பகல் நிலவு என்னும் சீரியல் மூலமாக நடிக்கவும் தொடங்கினார்.
இதனைத் தொடர்ந்து கலக்கப் போவது யாரு பிரபலமும் நடிகருமான அசார் நடிப்பில் ‘ஏன்டா தலையில எண்ணெய் வெக்கல’ என்கிற திரைப்படத்தை இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரியும், ஜி.வி.பிரகாஷ் குமாரின் தாயாருமான ஏ.ஆர்.ரெஹானா இசை அமைத்திருந்தார். அதன் பின்னர் Yours Shamefully என்கிற குறும்படத்தை விக்னேஷ் கார்த்திக் இயக்கியிருந்தார். இந்த படம் பிஹைண்ட்வுட்ஸில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த குறும்படத்திற்கான ரசிகர்கள் ஏராளம் இருக்கின்றனர். இந்த நிலையில்தான் அண்மையில் விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய தந்தையை இழந்தார்.
இந்நிலையில் இது பற்றி உருக்கமாக பேசியிருக்கும் விக்னேஷ் கார்த்திக், தன் அப்பாவுடன் தான் இருக்கும் ஒரு படப்பிடிப்பு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் Yours Shamefully குறும்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் தன் அப்பா தான் ஒளிப்பதிவு செய்தார் என்று குறிப்பிட்டிருக்கிறார். கடந்த லாக்டவுனில் எடுக்கப்பட்ட Yours Shamefully குறும்படத்தின் போது, அத படத்தை ஒளிப்பதிவு செய்த தன் அப்பாவிடம் தான் பேசிய நினைவுகளை பகிர்ந்திருககிறார். தம்முடைய தந்தை, தான் சொல்லிக் கொடுத்தது போல் கேமராவை பிடிக்காமல் மாற்றி செய்துவிட்டு பின்னர் மீண்டும் சொல்லிக் கொடுக்கும் பொழுது, “இந்த முறை சரியாக பிடிக்கிறேன்.. சாரி ராஜா!” என்று சிரித்துக்கொண்டே பதிலளிப்பாராம்.
இதை பகிர்ந்த விக்னேஷ் கார்த்திக், “என் வாழ்க்கையில் ஒருவரை இந்த அளவுக்கு மிஸ் பண்ணுவேன் என்று நான் நினைக்கவே இல்லை. எல்லாரும் இந்த மனநிலையில் இருந்து வெளிவர சொல்கிறார்கள். எனக்கும் புரிகிறது. ஆனால் இதில் இருந்து எப்படி வெளியே வருவது என்று தெரியவில்லை. என் அப்பா மீது நான் எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறேன் என்பது இப்போதுதான் புரிகிறது. சிறுவதில் நான் தவறு செய்யும் போது அம்மா ஏதேனும் சொல்லிவிட்டால் நான் அப்பாவிடம் தான் செல்வேன் என சொல்லி அழுவேன்.
ஆனால் இப்போது நான் எவ்வளவு அழுதாலும் உங்களிடம் இனிமேல் பேச முடியாது , உங்களை இனிமேல் பார்க்க முடியாது என்று நினைக்கும் போது என்ன செய்வதென்றே தெரியவில்லை அப்பா.. லவ் யூ சோ மச்.. நான் உங்களை எந்த அளவுக்கு விரும்புகிறேன் என்பதை இப்போதுதான் புரிந்து கொண்டிருக்கிறேன்!” என்று உருக்கமாக பதிவிட்டிருக்கிறார்.
VIDEO: "இனி எவ்ளோ அழுதாலும்..!" .. தந்தையை இழந்த பிரபல நடிகர்-இயக்குநர் உருக்கம்! வீடியோ