www.garudabazaar.com

மோகன்லால் நடித்த மரக்காயர் படம்! ரிசர்வேசன் வசூல் மட்டும் 100 கோடி? இயக்குனரே சொன்ன OFFICIAL REPORT!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குனர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான்.

Dir Priyadharshan about his Maraikkayar Movie Collection

இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற பெயரில் கலைப்புலி S தாணு வெளியிட்டார். தற்போது காலாபானி வெளியாகி 25 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையில் மீண்டும் மோகன்லாலும் ,பிரபுவும் மலையாள படமான "மரைக்கார் அரவிபிக்கடலிண்டே சிம்ஹம்"படத்தில் இணைந்து நடிக்கிறார்கள் . இந்த படத்தையும் பிரதர்ஷனே இயக்குகிறார் . தமிழில் இப்படம் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் எனும் பெயரில் கலைப்புலி S தாணு வெளியிடுகிறார் .

மேலும் இத்திரைப்படத்தில் அர்ஜுன், சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், சுஹாசினி, கீர்த்தி சுரேஷ், கல்யாணி பிரியதர்ஷன், முகேஷ் ,நெடுமுடி வேனு , அசோக் செல்வன்,பைசால் , சித்திக் . சுரேஷ் கிருஷ்ணா , போன்ற நட்சத்திரப்பட்டாளமே நடிக்கிறார்கள். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்கிறார் , MS ஐயப்பன் நாயர் படத்தொகுப்பினை கவனிக்கிறார் .ரோனி நபேல் இசையமைக்கிறார் .RP பாலா இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார் . இதற்கு முன்பு மோகன்லால் படடங்களான புலி முருகன் , லூசிபர் ஆகிய பிரமாண்ட வெற்றி படங்களுக்கு வசனங்களை எழுதியுள்ளார் என்பது .குறிப்பிடத்தக்கது ,

இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று சென்னையில் நடந்தது .

கலைப்புலி எஸ் தாணு பேசியவை,

25 ஆண்டுகளுக்கு முன்பு சிறைச்சாலை என்ற படத்தை பிரியதர்ஷன் எனக்கு தந்தார். அந்த திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் மிகப்பெரிய வெற்றியடைந்து .முன்னணி தொலைக்காட்சியிலும் ஒவ்வொரு வாரமும் படத்தை வெளியிட்டு முதலிடத்தை பிடித்தது. ஒளிப்பதிவும் கலை இயக்கமும், இசையும்  அனைத்தும் சிறப்பு .மேலும் பாடல் மற்றும் வசனங்களை RP பாலா அருமையாக கொடுத்துள்ளார் .எனது இனி வரும் படங்களில் அவர் நிறைய பாடல்கள் எழுத வேண்டும் என நினைக்கிறேன். இப்படத்தில் உழைத்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

Dir Priyadharshan about his Maraikkayar Movie Collection

இயக்குனர் பிரியதர்ஷன் பேசியவை ,

தமிழ் மற்றும் மலையாளம் மொழியில் இப்படத்தை எடுக்கலாம் மற்ற மொழிகளில் டப் செய்து கொள்ளலாம் என மோகன்லால் அவர்கள் கூறினார் .அதனால் இப்படத்தை எடுக்க ஆரம்பித்தோம். கலைப்புலி தாணு அவர்களிடம் நீங்கள்தான் இப்படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும் என கூறினேன் .அவர்தான் என்னுடைய நம்பிக்கை. இப்படம் குடும்பம் மாதிரி , என் மகள் கல்யாணி, பிரணவ் மோகன்லால், என்னுடைய உதவியாளர்கள், சுரேஷ் மகள் கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் நடித்துள்ளார்கள். பிரபு சார் இப்படத்தில் ஒரு கதாபாத்திரம் நடிக்க வேண்டுமென மோகன்லால் என்னிடம் கேட்டுக் கொண்டார். கேரளாவில் 639 தியேட்டர்களில் 632 தியேட்டரில் மரைக்காயர் வெளியாகிறது. படத்தின் ரிசர்வேஷன் மட்டும் 100 கோடியை தொட்டுள்ளது முதல் ஏழு நாட்கள் ஹவுஸ்ஃபுல். பெரிய ஓபனிங் மலையாளம் சினிமா கிடைத்துள்ளது.

Dir Priyadharshan about his Maraikkayar Movie Collection

இசையமைப்பாளர் ரோனி நபேல் பேசியவை

நான் பிரியதர்ஷன் அவர்களுக்கும் கலைப்புலி தாணு அவர்களுக்கும் கடமைப்பட்டுள்ளேன். என்னுடைய வாழ்வில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது பிரியதர்ஷன் சார். பல வருடங்களாக உதவி இசையமைப்பாளராக  திரையுலகில் இருந்திருக்கிறேன்.வாய்ப்பளித்த இயக்குனருக்கு நன்றி . பாடல்கள் மிகவும் அருமையாக வந்துள்ளது .அனைவருக்கும் நன்றி.

--

  தொழில்நுட்பக்குழு :

எழுத்து & இயக்கம் - பிரியதர்ஷன்

தயாரிப்பு - ஆசிர்வாத் சினிமாஸ் ( ஆண்டனி பெரும்பவூர்)

இணை தயாரிப்பு - DR ராய் CJ , சந்தோஷ் T குருவில்லா

தமிழ்நாடு வெளியீடு - V கிரியேஷன்ஸ் கலைப்புலி S தாணு

தயாரிப்பு வடிவமைப்பு - சாபு சிரில்

வசனம் - RP பாலா

ஒளிப்பதிவு - திருநாவுக்கரசு

இசை - ரோனி நபேல்

பின்னணி இசை - ராகுல் ராஜ் , அன்கித் சூரி ,லில் இவான்ஸ் ரோடர்

நடனம் - பிருந்தா , பிரசன்னா

நிர்வாக தயாரிப்பு - சுரேஷ் பாலாஜி ,ஜார்ஜ் டயல்

தொடர்புடைய இணைப்புகள்

Dir Priyadharshan about his Maraikkayar Movie Collection

People looking for online information on Box office, Kalaipuli thanu, Marakkar, Mohan Lal, Prabhu, Priyadharshan will find this news story useful.