கொரோனா வைரஸின் மக்களை ஒருபுறம் அச்சுறுத்திக்கொண்டிருக்கும் இந்த வேளையில் கடந்த சில மாதங்களாக தொடரும் திரையுலக பிரபலங்களின் மறைவு மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.

தமிழ் - தெலுங்கு மொழிகளில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களின் தொடர்ந்து வந்த நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி இன்று(08/09/2020) காலை திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74.
நடிகர் ஜெயப்பிரகாஷ் ரெட்டி தமிழில் 'ஆறு', 'உத்தமபுத்திரன்', 'ஆஞ்சநேயா', 'சின்னா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக 'உத்தமபுத்திரன்' படத்தில் காமெடி கலந்த அவரது கதாப்பாத்திரம் மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்படுகிறார். கடைசியாக அவர் நடிப்பில் மகேஷ் பாபுவின் 'சரிலேரு நீக்கெவ்வரு' படம் வெளியாகியிருந்தது. அவரது மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தமபுத்திரன் புகழ் பிரபல நடிகர் மரணம் - திரையுலகினர் அதிர்ச்சி வீடியோ