www.garudabazaar.com

தனுஷ் நடிக்கும் 'வாத்தி' 'SIR' படத்தில் இருந்து விலகிய முன்னணி சினிமா பிரபலம்! காரணம் என்ன?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஐதராபாத் - சென்னை : தனுஷ் - சம்யுக்தா நடிக்கும் வாத்தி (SIR) படத்தில் இருந்து சினிமா பிரபலம் வெளியேறி உள்ளார்.

Dhanush Sir Vaathi Movie DOP Dinesh Krishnan Walk out

தெலுங்கில் நாகவம்சியின் சித்தாரா என்டர்டெயின்மென்ட்  நிறுவனத்தின் புதிய படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாக உள்ளது.  இந்த படத்திற்கு வாத்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு G V பிரகாஷ் இசையமைக்கிறார்.

Dhanush Sir Vaathi Movie DOP Dinesh Krishnan Walk out

கல்வித்துறையை அடிப்படையாக கொண்டு இந்தப்படம் உருவாவதை போஸ்டர் மூலம் அவதானிக்க முடிகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு 2022 ஜனவரி 5 முதல் நடைப்பெற்று வருகிறது. இதற்கான ஆரம்ப பட பூஜை சில தினங்களுக்கு முன் நடந்தது. இதில் தனுஷ், இயக்குனர் வெங்கி, சம்யுக்தா மேனன் கலந்து கொண்டனர். இந்நிலையில் இந்த படத்தில் இருந்து வெளியேறுவதாக பிரபல ஒளிப்பதிவாளர் தினேஷ் கிருஷ்ணன் அறிவித்துள்ளார். 

Dhanush Sir Vaathi Movie DOP Dinesh Krishnan Walk out

சூது கவ்வும் , தெகிடி, சேதுபதி, காதலும் கடந்துபோகும், கனா, தானா சேர்ந்த கூட்டம், Mr.லோக்கல், கப்பல், மூக்குத்தி அம்மன், மாறா போன்ற படங்களுக்கு இதற்கு முன் தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விலகல் குறித்து டிவிட்டரில் “தனுஷ் நடிக்கும் ‘வாத்தி’ படத்தில் பணிபுரிய முடியாமல் போனது துரதிர்ஷ்டம். விரைவில் தனுசுடன் வேறொரு படத்தில் பணிபுரிய காத்திருக்கிறேன்” என்று #Covid ஹேஸ்டேக் உடன் ட்வீட் செய்துள்ளார். 

Dhanush Sir Vaathi Movie DOP Dinesh Krishnan Walk out

செல்வராகவன் இயக்கத்தில் தானு தயாரிப்பில் நானே வருவேன் என்ற படத்திலும் தனுஷ் நடித்து வருகிறார். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது. நானே வருவேன் படத்தின் ஆரம்ப நிலையில் ஒளிப்பதிவாளர் யாமினி யாக்ன மூர்த்தி விலகிய நிலையில் தற்போது ‘வாத்தி’ படத்தில் இருந்தும் ஒளிப்பதிவாளர விலகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Dhanush Sir Vaathi Movie DOP Dinesh Krishnan Walk out

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Sir Vaathi Movie DOP Dinesh Krishnan Walk out

People looking for online information on தனுஷ், வாத்தி, Dhanush, Dinesh Krishnan, Sir, Vaathi will find this news story useful.