www.garudabazaar.com

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. பொங்கி எழுந்த ஷகிலா.. "சிம்பு பேர எதுக்கு யூஸ் பண்றீங்க??

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து, பல்வேறு செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இதுகுறித்து ஷகிலா சில கருத்துக்களைத் தற்போது வெளியிட்டுள்ளார்.

Shakila statement about dhanush aishwarya divorce

கடந்த சில தினங்களுக்கு முன், நடிகர் தனுஷ் மற்றும் அவருடைய மனைவியும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா ஆகியோர், பிரியப் போவதாக அறிவித்த விஷயம், கடும் பரபரப்பைக் கிளப்பியிருந்தது.

18 ஆண்டுகள் இணைந்து வாழ்ந்த காதல் தம்பதி, திடீரென இந்த முடிவை அறிவித்தது, இணையத்தில் அதிகம் பேசுப் பொருளானது.

கடும் அதிர்ச்சி

அது மட்டுமில்லாமல், அவர்களின் ரசிகர்களும் இந்த தகவலையறிந்து கடும் அதிர்ச்சிக்குள் ஆக்கினர். தாங்கள் பிரியப் போவது பற்றி, தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரின் அறிக்கையில், 18 ஆண்டு திருமண வாழ்விற்கு பிறகு, நாங்கள் பிரிந்து கொள்ள முடிவு எடுத்து விட்டோம் என்றும், எங்களின் இந்த முடிவை ஏற்று, அதற்கு மதிப்பினை தர வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.

ஆதரவு

மேலும், இந்த முடிவைக் கையாள வேண்டி, எங்களின் போக்கில் விடுங்கள் என்றும் குறிப்பிட்டிருந்தனர். இதனைத் தொடர்ந்து, தனுஷின் ரசிகர்களும், இருவருக்கும் ஆதரவாக, தங்களின் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர். சில சினிமா பிரபலங்கள் கூட, தனுஷ் - ஐஸ்வர்யா முடிவு பற்றி கருத்து தெரிவித்து வந்தனர்.

பொங்கி எழுந்த ஷகிலா

இந்நிலையில், தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் பிரிந்ததைப் பற்றி, ஷகிலா அவர்கள் தன்னுடைய யூடியூப் சேனலில் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார். 'தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ஆகிய இருவரும் பிரிவதாக கூறுவது, இருவரின் தனிப்பட்ட விஷயம். சுமார் 18 ஆண்டுகள் வரை கணவர் - மனைவியாக வாழ்ந்து, அது சரி வராமல் தற்போது பிரிந்துள்ளனர்.

நீங்கள் யார்?

எங்களுடைய தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிட வேண்டாம் என்றும், புரிதலுடன் தான் நாங்கள் பிரிந்து கொள்ள முடிவு செய்தோம் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர். அப்படி இருக்கும் போது, இதனை விமர்சனம் செய்ய நீங்கள் யார்?. இத்தனை ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து, பிரியும் போது, அவர்கள் எந்த நிலையில் இருப்பார்கள் என்பது தெரியுமா?.

உங்கள் வீட்டில் நடந்தால் என்ன செய்வீர்கள்?

அதை எல்லாம் கண்டு கொள்ளாமல், சம்மந்தமே இல்லாத விஷயங்களை எல்லாம் இணைத்து கருத்து வெளியிடுகிறீரகள். இதே போல, ஒரு நிகழ்வு உங்கள் வீட்டில் நடந்தால் இது மாதிரி சம்மந்தமே இல்லாதவர்களுடன் இணைத்து வைத்து பேசுவீர்களா?. தனுஷ் இவருடன் இணைய போகிறார், அவருடன் இணையப் போகிறார் என நீங்களே கிளப்பி விடுகிறீர்கள்.

ரஜினிகாந்த் மனநிலை என்ன?

தேவையில்லாமல், சிம்பு உள்ளிட்ட பலரின் பெயர்களையும் இணைத்துப் பேசுகின்றனர். அதே போல, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய மகள் குறித்து வலம் வரும் கருத்துக்கள் பற்றி, கேள்விப்பட்டு எந்த அளவுக்கு மனவேதனை அடைந்திருப்பார்?.

இப்படி எதை பற்றியும் நினைத்து பார்க்காமல், உங்கள் மனதுக்கு தோன்றுவதை ஏன் தேவையே இல்லாமல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள்?.' என இணையவாசிகள் மற்றும் சில மீம்ஸ் கிரியேட்டர்களின் செயல்பாடு குறித்து, கடுமையாக விமர்சனம் செய்து கருத்து வெளியிட்டுள்ளார்.

தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து.. பொங்கி எழுந்த ஷகிலா.. "சிம்பு பேர எதுக்கு யூஸ் பண்றீங்க?? வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Shakila statement about dhanush aishwarya divorce

People looking for online information on Aishwarya, Dhanush, Rajinikanth, Silambarasan TR will find this news story useful.