யூடியூபில் ஆபாசமாக பேசிய விவகாரம்.. தலைமறைவாக இருந்த 'PUBG' மதன் 'அதிரடி' கைது!
முகப்பு > சினிமா செய்திகள்யூடியூப்பில் தடை செய்யப்பட்ட விளையாட்டான பப்ஜி விளையாட்டை பற்றிய நுணுக்கங்களை சொல்லிக் கொடுத்து வந்தவர் பப்ஜி.

ஆனால் இந்த விளையாட்டின்போது பெண்களை இழிவுபடுத்தி இவர் பேசும் ஆபாச பேச்சுக்களுக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்ததையடுத்து 'டாக்சிக்' மதன் என்று தன்னுடைய சேனல் பெயரை மாற்றிக்கொண்டு ஆபாச சேனலை நடத்தி வந்தவர் மதன். இதுகுறித்து பெண்கள் தரப்பிலிருந்து காவல்துறை சைபர் பிரிவுக்கு புகார் எழுந்ததையடுத்து, டாக்சிக் மதன் தேடப்பட்டு வந்தார். பின்னர் அவருடைய மனைவியும் வீட்டாரும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப் பட்டனர்.
அப்போது டாக்சிக் மதனின் சேனலில் பேசிய பெண் குரல் அவருடைய மனைவி கிருத்திகா தான் என்றும், அவர் நடத்திய சேனலுக்கு அட்மின் அவருடைய மனைவிதான் அட்மின் என்றும் தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
இதனிடையே இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வதாக மதன் தெரிவித்திருந்த நிலையில் அவருடைய வழக்கறிஞர் கோர்ட்டில் ஆஜராகி வாதாடும்போது, மதனின் யூடியூப் சேனலில் அவர் மிகவும் மோசமாக பேசியிருப்பதாகவும் மதனின் பேச்சுளை முழுமையாக கேட்டு விட்டு வாதாடும்படியும் நீதிபதி அறிவுறுத்தி வழக்கை தள்ளி வைத்தார்.
இந்த நிலையில் தேடப்பட்டு வந்த மதன் அதிரடியாக கைது செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.