Video: "ஒரு நிமிஷம்.. என்ன நடக்குது இங்க?".. ஆரியின் 'நெகிழ்ச்சி' செயல்!.. பரவும் வீடியோ!
முகப்பு > சினிமா செய்திகள்அண்மையில் ஒரு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்ட நடிகர் ஆரி, மேடையில் அமராமல் இறங்கிச் சென்று பார்வையாளர்களுடன் அமர்ந்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் 4வது சீசனின் டைட்டில் வின்னர் ஆரி, தொடர்ந்து சமூக பிரச்சனைகள் குறித்து பேசி வருவதுடன், மாலைப்பொழுதின் மயக்கத்திலே, நெடுஞ்சாலை படங்களின் மூலமாக தமிழ் சினிமாவில் நாயகனாக தனக்கென ஓர் முத்திரை பதித்தவர். எனினும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று தன்னுடைய நன்னடத்தை மூலமாக டைட்டில் வின்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சிக்கு பின்னர் ஆரிக்கு பட வாய்ப்புகளும், மக்களுக்கு அவர் மீதான அபிப்ராயமும் அதிகரித்துள்ளன. அந்த வகையில், ஆரி அண்மையில் ஒரு நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டார். அங்கு தான் மட்டும் அமருவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் பலவும் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் அந்த நிகழ்வின் மேடையில் தன்னை மட்டும் அமரச் சொன்னபோது அதை மறுத்த ஆரி, ‘அனைவரும் சமம்’ என சொல்லி, மேடையில் இருந்து இறங்கிச் சென்று பார்வையாளர்களுடன் பார்வையாளராக அமர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அண்மையில் ராவுத்தர் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆரி நடித்த, ‘எல்லாம் மேல இருக்குறவன் பாத்துப்பான்’ என்கிற சயின்ஸ் ஃபிக்சன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியது. தவிர, ஒரு போலீஸ் ஸ்டோரியில் ஆரி நடிக்கும் நிலையில்,
ஏற்கனவே ஆரி நடித்த அலேகா, பகவான் போன்ற படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.
VIDEO: "ஒரு நிமிஷம்.. என்ன நடக்குது இங்க?".. ஆரியின் 'நெகிழ்ச்சி' செயல்!.. பரவும் வீடியோ! வீடியோ