www.garudabazaar.com

#D43FirstLook.."பிறந்த நாளில்" வெளியான தனுஷ்- கார்த்திக் நரேன் படத்தின் ‘மாஸ்’ டைட்டில் லுக்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தொடர்ச்சியாக வடசென்னை, அசுரன், கர்ணன் என ஹிட் படங்களை கொடுத்த நடிகர் தனுஷ், மாரி உள்ளிட்ட தொடர் வரிசை படங்களிலும் நடித்துள்ளார்.

dhanush D38 Birthday d43 title announced Maaran

கடைசியாக அசுரன் படத்துக்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்ற தனுஷ் இன்று (ஜுலை 28) தனது 38 வது பிறந்த நாளை கொண்டாடுவதால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

dhanush D38 Birthday d43 title announced Maaran

இதற்கென தனுஷ் உருவம் பொறித்த கிரேக்க நாணய வடிவத்தில் ஒரு  ‘Common Dp’-ஐ தனுஷின் சகோதரரும் பிரபல தனுஷின் ஆதர்ச இயக்குநருமான செல்வராகவன் தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். செல்வராகவன் தனுஷின் காதல் கொண்டேன், புதுப்பேட்டை படங்களை இயக்கியவர். தற்போது தனுஷின் நானே வருவேன் படத்தை இயக்கி வருகிறார்.

dhanush D38 Birthday d43 title announced Maaran

இதனிடையே துருவங்கள் பதினாறு, மாஃபியா, நரகாசூரன் படங்களின் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் D43 படத்தில் தனுஷ் நடிக்கிறார். இப்படத்தில் தனுஷூடன் மாளவிகா மோகனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் சமுத்திரகனி,  ‘மாஸ்டர்’ படப்புகழ் மகேந்திரன் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

இந்நிலையில் தற்காலிகமாக D43 என பெயர் வைக்கப்பட்டு அழைக்கப்பட்டு வந்த இந்த படத்தின்  First Look போஸ்டர் தனுஷ் பிறந்த நாளையொட்டி இன்று வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்துக்கு, ‘மாறன்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் லுக்கில், தனுஷ் ஒருவரின் தலையை பிடித்து அடிக்க, கண்ணாடி சிதறிக்கிடக்கிறது. அதிலும் தனுஷின் முகங்கள் தெரிகின்றன. இந்த டைட்டில் லுக்கினை இப்படத்தை தயாரிக்கும் சத்யஜோதி பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது.

ALSO READ: தனுஷ் பிறந்த நாள்... "ஹாலிவுட் கதவுகள் தானாக திறக்கும்.. கோலிவுட் நாயகன்".. வாழ்த்து சொன்னது யார் பாருங்க!

dhanush D38 Birthday d43 title announced Maaran

People looking for online information on D43, D43FirstLook, D43TitleLook, Dhanush43, DhanushMaaran, Karthick Naren, Maaran will find this news story useful.