ராட்சசி என்ற புதிய படத்தை இயக்கி இருக்கும் புதுமுக இயக்குனர் சை.கௌதம்ராஜ், ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

ஜோதிகா நடித்து, ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதுமுக இயக்குநர் சை.கௌதம்ராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் “ராட்சசி”. ஹீரோயின்களுக்கு முக்கியத்துவத்துடன் நல்ல கதைகளாகவும் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜோதிகா. அவரின் அடுத்த படமான ராட்சசி படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.
விரைவில் படம் திரைக்கும் வர இருக்கும் நிலையில் அதனை இயக்கியுள்ள இயக்குநர் சை.கௌதம்ராஜ் படத்தைப் பற்றிக் கூறும்போது, ‘ஒவ்வொரு பையனோட முதல் ஹீரோயினும் ஒரு டீச்சராத் தான் இருப்பாங்க. எனக்கு என்னோட நாலாங்கிளாஸ் நிர்மலா டீச்சர், ஒவ்வொருத்தருக்கும் இப்படி ஒரு டீச்சரோட பேர் கட்டாயம் மனசில இருக்கும். நம்மளோட அந்த டீச்சர் பள்ளிக்கூடத்துல நடக்குற நடக்க வேண்டிய விசயங்களை எனக்கென்னன்னு இல்லாம எதிர்த்து நின்னு அத்தனை பேருக்கு முன்னாடி கம்பீரமா கேள்வி கேட்கும் போது, மனசுல தோணும்.. “இவங்கதான் என்னோட சூப்பர் ஹீரோயினி”- ன்னு அவங்கதான் இந்த டீச்சர் “ராட்சசி” கீதாராணி.
கேள்வி கேட்டுட்டு அப்படியே நிக்கிறவங்கள நாட்கள் நகர நகர மக்கள் மறந்துடுவாங்க. ஆனா யாரு செயல்ல அதைக் காட்டுறாங்களோ அவங்கள தான் வரலாறு பேசும். கட்டாயமா இந்த ராட்சசியையும் பேசும்.
இதுல ராட்சசியா ஜோதிகா மேடமத் தவிர வேற யாரும் இவ்வளவு கச்சிதமா பண்ணிரமுடியாது, அது படம் பாக்கும் போது உங்களுக்கும் தெரியும். ஒரு கதைய தேர்ந்தெடுக்கும் போதும், அதை நடிக்கும் போதும் தனக்கு சமுதாயத்துல பொறுப்புணர்வு இருக்குன்னு முழுமையா நம்புறாங்க, அவங்க எப்பவும் ஜெயிச்சிட்டே தான் இருப்பாங்க. ராட்சசி கதைய கேட்டதுல இருந்து நிறைய ஹோம் ஒர்க் பண்ணாங்க, நிறைய டீச்சர்கிட்ட பேசுனாங்க. அவங்க டிரஸ்ஸிங், மேக்கப் சேஞ்ச், பாடிலாங்குவேஜ்னு அவ்வளவு டெடிகேசன், “ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி.”
தனியார் பள்ளி - அரசுப்பள்ளிங்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவேக் கூடாது, அந்த எண்ணத்தை மாத்தணும்னு போராடுறவங்க தான் இந்த "ராட்சசி" கீதாராணி. இந்த நோக்கத்தோட எத்தனையோ ஆசிரியர்கள் தமிழ்நாடு முழுக்க தனி ஆட்களா, அரசுப் பள்ளிய உயர்த்த போராடிகிட்டு இருக்காங்க, அதை வலிமையாக பேச இந்த மாதிரி ராட்சசிங்க வந்தே ஆகணும்.