www.garudabazaar.com

இந்த லுக்குக்கு அஜித்தான் காரணம்… கேமராமேனின் fanboy மொமண்ட்… விஜய் டிவி டிடி பகிர்ந்த வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகரும் தொகுப்பாளருமான திவ்யதர்ஷின் தன்னுடைய  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள ஸ்டோரி ஒன்று இணையத்தில் கவனத்தைக் குவித்து வருகிறது.

DD shared Cameraman imitates ajith salt and pepper look video

பாலா - சூர்யா படத்துக்காக தமிழுக்கு வரும் பிரபல ஹீரோயின்? ஃபேன்ஸ கைல புடிக்க முடியாதே..!

சால்ட் அண்ட் பெப்பர்

சினிமா நடிகர்கள் எப்போதும் தங்கள் தோற்றத்தில் அதிக ஆர்வம் கொள்பவர்கள். அதனால் பெரும்பாலானவர்கள் தங்கள் நரைத்த தலைமுடியோடு பொதுவெளியில் தோன்ற மாட்டார்கள். ஆனால் இந்த வழக்கத்தையும் சில நடிகர்கள் மாற்றியுள்ளனர். அதில் முக்கியமானவர் ஹாலிவுட் நடிகர் ஜார்ஜ் க்ளூனி. அவர்தான் சால்ட் அண்ட் பெப்பர் தலைமுடியை ரசிகர்கள் இடையே அதிகளவில் பிரபலமாக்கியது. அவரின் பல படங்களில் கருப்பு வெள்ளைக் கலந்த முடியோடு இயல்பான தோற்றத்தில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.

சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித்

தமிழகத்தில் இந்த லுக் அதிக கவனம் பெறுவதற்கு முக்கியக் காரணமாக அமைந்தவர் அஜித்தான். அவரின் 50 ஆவது படமான மங்காத்தாவின் வெள்ளை முடியோடு கலந்த நரைமுடியோடு அவர் நடித்திருந்தார். அந்த லுக் ரசிகர்கள் இடையே வரவேற்பைப் பெற்றதை அடுத்து தொடர்ந்து அதே போன்ற தோற்றத்தில் அவரின் அடுத்தடுத்த படங்களான ஆரம்பம், என்னை அறிந்தால், வீரம், விஸ்வாசம் மற்றும் வலிமை ஆகியவற்றில் நடிக்க ஆரம்பித்தார். இதனால் பலரும் டை அடிப்பதை நிறுத்திவிட்டு சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் இருந்து வருகின்றனர்.

DD shared Cameraman imitates ajith salt and pepper look video

கேமராமேனின் வீடியோவைப் பகிர்ந்த டிடி

இந்நிலையில் விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளரான டிடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ள வீடியோவில் கேமராமேன் ஒருவர் அவரிடம் பேசுகிறார். அதில் தன்னுடைய நரைமுடி தோற்றத்துக்கு அஜித்தான் காரணம் என்று சொல்கிறார். அதில் ‘என் லுக்கை பார்த்தாலே தெரியும். அவரால்தான். அவரோடு வீரம், வேதாளம், விஸ்வாசம் மற்றும் விவேகம் ஆகிய நான்கு படங்களில் பணியாற்றியுள்ளேன்’ என உணர்ச்சிப் பெருக்கில் பேசுகிறார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் கவனம் பெற்று வருகிறது.

DD shared Cameraman imitates ajith salt and pepper look video

அது என்ன சால்ட் அண்ட் பெப்பர் லுக்

உப்பையும் மிளகையும் ஒன்றாக சேர்த்தால் எப்படி வெள்ளை நிறமும் மிளகின் நிறமும் கலந்து ஒரு மாதிரியாக தெரியுமோ அதுபோல தலையில் உள்ள கருப்பு முடியும் நரைமுடியும் கலந்திருக்கும் தோற்றத்தை சால்ட் அண்ட் பெப்பர் லுக் என சொல்லப்படுகிறது. மத்திம வயதைத் தாண்டியவர்களின் ஆதர்சமான லுக்காக இப்போது சால்ட் அண்ட் பெப்பர் லுக் மாறி வருகிறது.

DD shared Cameraman imitates ajith salt and pepper look video

”வாழு வாழவிடு" திடீரென பிரபல த்ரோபேக் statement-ஐ பகிர்ந்த அஜித்தின் மேலாளர்!

தொடர்புடைய இணைப்புகள்

DD shared Cameraman imitates ajith salt and pepper look video

People looking for online information on Ajith Kumar, Ajith salt and pepper look, அஜித், சால்ட் அண்ட் பெப்பர், திவ்யதர்ஷின், Cameraman, DD, Divya Dharshini will find this news story useful.