www.garudabazaar.com

"எப்படிங்க சொல்லாம பண்ணுவேன்?" சர்ச்சை ஃபோட்டோவுக்கு CWC புகழின் ரியாக்ஷன்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டி.வியில் ஒளிபரப்பான 'சிரிப்புடா', 'குக் வித் கோமாளி' என ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு பிரபலமானவர் புகழ்.

CWC pugazh Reaction to Controversial wedding Pics

இவருக்கு 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சிக்குப் பிறகு தற்போது நிறைய சினிமா வாய்ப்புகள் வரிசையாக வரத்தொடங்கியுள்ளது. மகிழ்ச்சியில் திளைத்திருக்கும் புகழுக்கு அவ்வப்போது வரும் சில செய்திகளால் நிலைகுலைந்தும் போகிறார்.

CWC pugazh Reaction to Controversial wedding Pics

ஆமாம், சில தினங்களுக்கு முன் புகழ் ரகசியமாக திருமணம் செய்து கொண்டதாகவும், புகழின் நெருங்கிய நட்பு வட்டத்திலிருந்தவர்கள் மட்டுமே கலந்துகொண்டதாகவும் சமூகவலைதளங்களில் போட்டோ ஒன்று வைரலாகி இருக்கிறது.

சமூகவலைதளங்களில் வெளியான இந்த புகைப்படத்தைப் பார்த்த அவருடைய ரசிகர்கள், "என்னையா மனுஷன் எல்லா இடத்துலையும் சிங்கிள்னு சொல்லிட்டு வர்றாரு, திடீர்ணு போட்டோ போட்டு கல்யாணம் ஆயிடுச்சுனா எப்படி?, இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு. யார் பார்த்த வேலையா இருக்கும்?" என்று குழம்பி வந்தனர். 

CWC pugazh Reaction to Controversial wedding Pics

இந்த போட்டோ பற்றியும் வெளியாகும் செய்திகள் குறித்தும் நமது குழுவினர் புகழிடம் கேட்டபோது அவர், "என் கல்யாணத்துக்கு என்னையே கூப்பிடக் காணோம்,  இந்த போட்டோஸ்லாம் நானும் பார்த்தேன். எனக்கு கல்யாணம்னா நான் எல்லோர் கிட்டையும் சொல்லிட்டுதான் பண்ணுவேன்" என்றிருக்கிறார்.

கோலிவுட்டிலும் பிஸியாக இருக்கும் புகழுக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள்  காத்திருக்கின்றன என்பதும், அவரை திரையில் காண அவரது ரசிகர்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"எப்படிங்க சொல்லாம பண்ணுவேன்?" சர்ச்சை ஃபோட்டோவுக்கு CWC புகழின் ரியாக்ஷன்! வீடியோ

Tags : Pugazh, CWC, TV show

தொடர்புடைய இணைப்புகள்

CWC pugazh Reaction to Controversial wedding Pics

People looking for online information on CWC, Pugazh, TV show will find this news story useful.