Reliable Software
www.garudabazaar.com

'இந்த' குக் வித் கோமாளி பிரபலம் யார்னு தெரியுதா? ட்ரெண்ட் ஆகும் Throwback புகைப்படம்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மக்களின் ஏகோபித்த ஆதரவால் சின்னத் திரையில் நம்பர் 1 நிகழ்ச்சி என்கிற இடத்தையும் பிடித்து அசத்தியுள் இந்த நிகழ்ச்சியில் இதுவரை இரண்டு சீசன்கள் முடிந்துள்ளன.

CookWithComali2 Pavithra lakshmi throwback pic trending viral

அத்துடன் இந்த நிகழ்ச்சியின் 3வது சீசனுக்காக ரசிகர்கள் இப்போதிலிருந்தே காத்திருக்கின்றனர். முன்னதாக முதல் சீசனில் ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நிலையில், 2வது சீசனில் அஸ்வின், பவித்ரா, ஷகிலா, கனி, தர்ஷா, டான்ஸ் மாஸ்டர் பாபா பாஸ்கர் ஆகியோர் போட்டியாளர்களாக கலந்து கொண்டனர். புகழ், சிவாங்கி, மணிமேகலை, சரத், பாலா, சுனிதா ஆகியோர் கோமாளிகளாக வந்து இந்த நிகழ்ச்சியில் கலக்கினர். இதனால் காமெடிக்கு பஞ்சமில்லாத அளவுக்கு அஸ்வினுடன், சிவாங்கி செய்த கியூட் எக்ஸ்பிரஷன் சேட்டைகள், பவித்ராவுடன் புகழ் செய்த சேட்டைகள் கலாட்டாக்கள் அனைத்தும் களைகட்டின.

இந்நிலையில், தான், பவித்ரா, தமது தாயாருடன் தமது குழந்தை பருவத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை இணையத்தில் பதிவிட்டிருக்கிறார். இந்த புகைப்படத்தில் குட்டி பவித்ரா க்யூட்டாக இருப்பதாக நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். பல வருடங்களுக்கு முன்பாக எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்துடன் இணைந்து தற்போது தமது தாயாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் பவித்ரா பதிவிட்டுள்ளார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அஸ்வின், புகழ், சிவாங்கி உள்ளிட்டோர் அடுத்தடுத்து திரைத்துறையில் நடித்துவரும் நிலையில், நடிகை பவித்ரா, தற்போது ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட் (AGS Entertainment) தயாரிக்கும் புதிய படத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: "இந்த மாதிரி புரொபோசல் வந்தா என்ன செய்வீங்க?".. ரசிகரின் கேள்வி.. அனிகாவின் க்யூட் பதில்கள்!

மேலும் செய்திகள்

CookWithComali2 Pavithra lakshmi throwback pic trending viral

People looking for online information on CookuWithComali2, CookWithComaliSeason2, CWC2, Pavithra Lakshmi will find this news story useful.