Video: "இந்த மாதிரி புரொபோசல் வந்தா என்ன செய்வீங்க?".. ரசிகரின் கேள்வி.. அனிகாவின் க்யூட் பதில்கள்!
முகப்பு > சினிமா செய்திகள்தல அஜித் நடித்த என்னை அறிந்தால் திரைப்படத்தில் தல அஜித்தின் ரீல் மகளாக நடித்து புகழ்பெற்றவர் அனிகா சுரேந்திரன்.

ரசிகர்களால் ‘குட்டி நயன்தாரா’ என புகழப்படும் அனிகா சுரேந்திரனின் புகைப்படங்களும் புதிய போட்டோ ஷூட்களும் எப்போதும் இணையதளத்தை கலக்கி வருபவை. தல அஜித்தின் மகளாக என்னை அறிந்தால் படத்தில் நடித்ததைத் தொடர்ந்து தல அஜித், நயன்தாரா நடித்து பெருவெற்றி பெற்ற விஸ்வாசம் படத்திலும் அஜித்தின் மகளாக கவர்ந்தார்.
இந்நிலையில் ரசிகர்களுடன் அனிகா ஒரு குட்டி கேள்வி பதில் செஷனில் உரையாடியுள்ளார். அதில் அனிகா பல விதமான சுவாரஸ்யமான பதில்களை ரசிகர்களுக்கு அளித்துள்ளார். அதில், அனிகாவின் உயரம் பற்றி கேள்வி கேட்ட ரசிகர் ஒருவர், “என்னைக்காவது குள்ளமாக இருப்பதாக வருந்தியுள்ளீர்களா?” என கேட்டதற்கு, பதில் அளித்த அனிகா, “நானும் பல டைம் ஃபீல் பண்ணியிருக்கிறேன். ஆனால் அப்படி இருந்தால் நமக்கு பிடிச்ச உடைகளை அணிந்து பார்க்கலாம். எப்போதும் இளமையாகவே இருப்போம். ஆக, அப்படி இருப்பது ஒன்றும் பிரச்சனை இல்லைங்க!” என க்யூட்டாக கூறியுள்ளார்.
இதேபோல், இன்னொரு ரசிகர் சற்றே அதிரவைக்கும் கேள்வியாக, “உங்களுடைய தீவிர ரசிகர் ஒருவர் உங்களுக்கு புரொபோஸ் செய்துவிட்டு.. நீங்க ஓகே சொல்லவில்லை என்றால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினால் என்ன செய்வீங்க?” என கேட்க, அதற்கு அனிகாவோ, “அட உண்மையிலேயே எனக்கு அப்படியெல்லாம் இ-மெயில் வந்துருக்குங்க.. ஆனா எனக்கு என்ன சொல்றதுனே தெரியல..” என தன் முக பாவனையுடன் கூடிய பதிலை அளித்துள்ளார்.
அண்மையில் வெளியான வைரமுத்துவின் வரிகளில் நாட்படுதேறல் ஆல்பம் தொகுப்பின் வீடியோவில் என் காதலா பாடலில் அனிகா நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் வேம்பையர் சீரிஸ், தன்னைத் தானே விரும்புவது உள்ளிட்ட விஷயங்களை பற்றி பகிர்ந்துள்ள அனிகாவின் முழு உரையாடலையும் இணைப்பில் உள்ள வீடியோவில் காணலாம்.
VIDEO: "இந்த மாதிரி புரொபோசல் வந்தா என்ன செய்வீங்க?".. ரசிகரின் கேள்வி.. அனிகாவின் க்யூட் பதில்கள்! வீடியோ