www.garudabazaar.com

"உங்களுக்கு தெரியாதா??.. பவித்ரா ஒரு குட்டி ஜிவி பிரகாஷ்!!.." சக்தி, சுதர்ஷன் செய்த 'காமெடி' ரகளை!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா தொற்று காலத்தில், துவண்டு போய், வீட்டிற்குள்ளே முடங்கிக் கிடந்த மக்களுக்கு, மிகப்பெரிய வரப்பிரசாதமாக வந்த நிகழ்ச்சி தான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த 'குக் வித் கோமாளி - சீசன் 2'.

சக்தி சுதர்சன் இணைந்து பவித்ராவை கலாய்த்துத் தள்ளிய ஃபன் வீடியோ | Cook with comali Pavithra Lakshmi Fun video with Sakthi and Sudharshan Govind

சினிமா மற்றும் சமூக வலைத்தங்கள் மூலம் பிரபலமானவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், அவர்களின் சமையலுக்கு உதவியாக கோமாளிகள் சிலரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் இருந்த நிலையில், இந்த நிகழ்ச்சி முடிவடைந்ததும், அதற்காக கண்ணீர் விட்டு கலங்கிய ரசிகர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் குக்காக கலந்து கொண்டிருந்த பவித்ரலக்ஷ்மி, தனது நண்பர் சுதர்சன் மற்றும் கோமாளியாக வந்த சக்தியுடன் இணைந்து வீடியோ கால் செய்துள்ளார். இந்த வீடியோவில் மிகவும் கலகலப்பாக மூவரும் பேசியதையடுத்து, இதற்கிடையே, சக்தி மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து, பவித்ராவை கலாய்த்த ஒரு பகுதி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

இருவரும் இணைந்து பவித்ராவை 'நீங்கள் ஒரு குட்டி ஜி.வி. பிரகாஷ் குமார்' என தெரிவித்துள்ளனர். இந்த பகுதி, நெட்டிசன்கள் மத்தியில் அதிகம் ஹிட்டடித்த வருகிறது.

"உங்களுக்கு தெரியாதா??.. பவித்ரா ஒரு குட்டி ஜிவி பிரகாஷ்!!.." சக்தி, சுதர்ஷன் செய்த 'காமெடி' ரகளை! வீடியோ

சக்தி சுதர்சன் இணைந்து பவித்ராவை கலாய்த்துத் தள்ளிய ஃபன் வீடியோ | Cook with comali Pavithra Lakshmi Fun video with Sakthi and Sudharshan Govind

People looking for online information on Cook with comali, Pavithra Lakshmi, Sakthi, Sudharshan will find this news story useful.