www.garudabazaar.com

3:33 லக்கி நம்பரா? ரசிகரின் கேள்விக்கு பதில் சொன்ன 'கோப்ரா' இயக்குனர் அஜய் ஞானமுத்து!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோப்ரா படம் பற்றி ரசிகர்களின் கேள்விகளுக்கு இயக்குனர் அஜய் ஞானமுத்து பதில் அளித்துள்ளார்.

Cobra Movie Director Ajay Gnanamuthu about Film Duration

விக்ரம் நடிப்பில்  இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில்  விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோப்ரா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது.

Also Read | ONAM: பிரபல OTT-யில் ரிலீஸாகும் BLOCKBUSTER 'சீதா ராமம்'.. எப்போ? எதுல?

இந்தப் படத்தை லலித் குமார் தயாரிக்க, இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் 488 திரையரங்குகளில் கோப்ரா படம் வெளியாகி உள்ளது.

கோப்ரா படத்தின் சேட்டிலைட் உரிமம் கலைஞர் டிவிக்கு விறக்கப்பட்டுள்ளது. இந்த கோப்ரா படம் இந்திய அரசின் சென்சார் போர்டு மூலம் சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்திற்கு CBFC, U/A சான்றிதழ் வழங்கியது.‌

Cobra Movie Director Ajay Gnanamuthu about Film Duration

மேலும் இந்த திரைப்படம் மூன்று மணி நேரம் 3 நிமிடங்கள் 3 வினாடிகள் ஓடும் என்றும் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்டது. பின்னர் படத்தின் நீளம் 20 நிமிடங்கள் வரை குறைக்கப்பட்டது. இச்சூழலில் ரசிகர்களுடன் கலந்துரையாடல் நிகழ்வில் இயக்குனர் அஜய் ஞானமுத்து கலந்து கொண்டார்.

Cobra Movie Director Ajay Gnanamuthu about Film Duration

அப்போது படத்தின் நீளம் 3:3:3 என வைத்தது குறித்து ஒரு கேள்வியை அந்த ரசிகர் கேட்டார். அதற்கு பதில் அளித்த அஜய் ஞானமுத்து, "சரி!! 3 என் அதிர்ஷ்ட எண் அல்ல!! 3+3+3=9 என்பதும் எனது அதிர்ஷ்ட எண் அல்ல!! 3*3*3-27 என்பதும் எனது அதிர்ஷ்ட எண் அல்ல, எந்த முக்கிய விவரங்களையும் தவற விடாமல் இருக்க நாங்கள் வெட்டி உருவாக்கிய பதிப்பு 3:3:3 என வந்தது, மேலும் படம் பார்வையாளர்களுக்கு பிடிக்கும் என்று நாங்கள் நினைத்தோம். அதேபோல் சில பார்வையாளர்கள் முழு பதிப்பை இன்னும் விரும்புகிறார்கள் !! ஆனால் நீளம் சரிபார்க்கப்பட வேண்டும்!! அடுத்த முறை முதல் இதனை சரி செய்ய வேண்டும்" என கூறியுள்ளார்.

Cobra Movie Director Ajay Gnanamuthu about Film Duration

இந்த கோப்ரா படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நடித்துள்ளார். இவர்களுடன் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார், குஜராத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான், மியா ஜார்ஜ், கனிகா, மிருணாளினி, ஜான் விஜய் ஆகியோர் நடித்துள்ளனர்.

Also Read | மல்லிகைப்பூ, பட்டுப்புடவையில் சாய் பல்லவி.. தஞ்சை பெரிய கோவிலில் சாமி தரிசனம்! வைரல் வீடியோ

தொடர்புடைய இணைப்புகள்

Cobra Movie Director Ajay Gnanamuthu about Film Duration

People looking for online information on Ajay Gnanamuthu, Chiyaan Vikram, Cobra, Vikram will find this news story useful.