பிக்பாஸ் வீட்டில் இன்று முதன்முறையாக சம்யுக்தா சண்டை போட்டு இருக்கிறார். நிகழ்ச்சி ஆரம்பித்து 3 வாரங்கள் கடந்துள்ள நிலையில் அனிதா-சுரேஷ், அர்ச்சனா-பாலாஜி, சனம்-பாலாஜி ஆகியோர் சண்டை போடும் ப்ரோமோக்கள் மட்டுமே இதுவரை வெளியாகின. சோமசேகர், சம்யுக்தா இருவரும் ஈடுபாடு குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என சக போட்டியாளர்களே விமர்சனம் செய்யும் அளவுக்கு இவர்கள் அமைதியாக இருந்தனர்.

இந்த நிலையில் அந்த நிலை மெதுவாக மாற ஆரம்பித்து இருக்கிறது. சம்யுக்தா இந்த வாரம் நாமினேஷன் பட்டியலில் இடம்பெறவில்லை. அதேபோல டாஸ்க்குகளில் அவர் ஈடுபாடு காட்ட ஆரம்பித்து இருக்கிறார். இன்று நடைபெற்ற தங்க சுரங்கம் டாஸ்க்கில் பாலாஜி, சம்யுக்தா ஆகியோர் தங்களது குழுவுடன் உள்ளே செல்லுமுன் துணி எடுத்து சென்றனர். இதைப்பார்த்த சனம் இதெல்லாம் எடுத்து போகக்கூடாது என்பது போல ஆட்சேபம் தெரிவித்தார்.
😂😂#BiggBossTamil #BiggBossTamil4 pic.twitter.com/nXOoPMxLOP
— 💖 ᴍɪɴɪ 💖 (@Kuttymaa_) October 27, 2020
இதைக்கேட்டதும் சம்யுக்தாவுக்கு கோபம் வந்து விட்டது. எல்லா விஷயத்திலும் தலையிடுறீங்க இதுவே உங்களுக்கு வேலையா போச்சு என கத்த ஆரம்பித்து விட்டார். அவரின் கோபம் ப்ரோமோவில் இடம் பிடிக்கும் அளவுக்கு வந்து விட்டது. இதைப்பார்த்த நெட்டிசன்கள் கடைசில என்னையும் கோபப்பட வச்சுட்டீங்களே என முதல்வன் பட மீம்ஸ் போட்டு கிண்டலடித்து வருகின்றனர்.